- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டில் நடக்கும் வரம்பு மீறிய சம்பவங்கள், அதுபற்றி வாயே திறக்காத கமல்ஹாசன் - அதற்கு...

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வரம்பு மீறிய சம்பவங்கள், அதுபற்றி வாயே திறக்காத கமல்ஹாசன் – அதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்குதா?

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது நடந்து வருகிறது. வழக்கம்போல இந்த முறையும் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசன்களை போல இல்லாமல், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என இரண்டு வீடுகளில் போட்டியாளர்கள் தங்கி, விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்கத்தில் சினிமா நடிகர், நடிகையர் பலர் பங்கேற்றனர் அந்த வகையில் நடிகர்கள் சரவணன், கஞ்சா கருப்பு, பரணி, கல்யாண் வெங்கட்ராமன், சென்ட்ராயன், வையாபுரி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, கவிஞர் சிநேகன், ரேகா, பி வாசு மகன் சக்தி, இயக்குநர் சேரன், ஓவியா, கவின், ஹரீஸ் கல்யாண், காயத்ரி ரகுராம் என பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில், சினிமாவில் நடித்து வாங்கிய நல்ல பெயரை, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததால் பெரும்பாலும் சில சீசன்களாக பிரபல நடிகர், நடிகையர் இந்த நிகழ்வில் பங்கேற்பது இல்லை. அதனால் டிவி சீரியல் நடிகர், நடிகையர், சோஷியல் மீடியா செலிபரட்டிகளை பிக்பாஸ் வீட்டுக்குள் அதிகமாக காண முடிகிறது.

இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் சினிமா பிரபலங்களாக வந்தவர்கள் நடிகை விசித்ரா, நடிகர்கள் கூல் சுரேஷ், யுகேந்திரன் என மூன்றுபேர் மட்டுமே. அதில் விசித்ரா மட்டுமே இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். அவர்தான் இந்தமுறை டைட்டில் வின்னராக வருவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தவறு செய்தால் கமல்ஹாசன் சனி, ஞாயிறுகளில் வந்து கண்டித்து பேசுவார். குறிப்பாக அந்த நிகழ்வுகளை சொல்லி, அதில் மிக மோசமாக நடந்த போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்து பேசுவார். அதனால் அவர் வரும்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பலரும் ஒருவித படபடப்புடன் இருப்பர்.

ஆனால் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்த வரை, அந்த நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே கமல் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3. கல்கி ஆகிய படங்களில் நடித்து வரும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்பு போல் தினமும் பார்ப்பது இல்லை. நேரம் கிடைத்தால் மட்டுமே பார்க்கும் அவர், மற்ற நாட்களில் நிகழ்ச்சியை கவனிப்பது இல்லை. முக்கிய சர்ச்சை என்றால் மற்றவர்களிடம் அரைகுறையாக கேட்டுத் தெரிந்துக்கொள்கிறார். அதனால் முக்கிய பிரச்னைகளை, போட்டியாளர்களிடம் பேசுவார் என எதிர்பார்த்தால், எதைஎதையோ பேசிவிட்டு போய்விடுகிறார் கமல்.இது பலத்த ஏமாற்றத்தை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

சற்று முன்