- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸ் படத்தை ஜெயிக்க வைக்க கமல்ஹாசனை உள்ளே கொண்டு வந்த படக்குழு? மாஸ்டர் பிளான் !

பிரபாஸ் படத்தை ஜெயிக்க வைக்க கமல்ஹாசனை உள்ளே கொண்டு வந்த படக்குழு? மாஸ்டர் பிளான் !

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த பிரபாஸை, “பாகுபலி” திரைப்படம் பேன் இந்திய நடிகராக மாற்றியது. பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்தே தெலுங்கில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா உலகில் வழக்கம்போல் ஒரு ஆக்சன் ஹீரோவாகவே வலம் வந்த பிரபாஸ், “பாகுபலி” திரைப்படத்தின் மூலம் இந்திய அலவில் பார்க்கப்பட்டார். அத்திரைப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் இந்திய அளவில் எகிறியது.

ஆனால் இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், “பாகுபலி”, “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்த “சாஹோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது பிரபாஸ் “ஆதிபுருஷ்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் மாதம் வெளிவரவுள்ளது.

- Advertisement -

அதே போல் தற்போது பிரபாஸ், கேஜிஎஃப் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் “பிராஜெக்ட் கே” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை “நடிகையர் திலகம்” படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கவுள்ளார். ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திசா படானி ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகவுள்ளதாம்.

- Advertisement -

இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், “பிரபாஸிற்கு மார்க்கெட் இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் நினைக்கின்றனர். அப்படி இல்லாமல் இவ்வளவு கோடிகளை போட்டு படம் தயாரிக்கமாட்டார்கள். அதே போல் இத்திரைப்படத்தை பெரிய படமாக கொண்டு சென்று இதில் போட்ட முதலீட்டை எப்படியாவது மீட்டு எடுக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோரை இதில் நடிக்க வைக்கின்றனர்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்