விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

தற்போது “லியோ” திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். அதில் கிட்டத்தட்ட 2000 டான்சர்கள் நடனமாடுகிறார்கள் எனவும் மிக பிரம்மாண்டமாக அப்பாடல் காட்சி உருவாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் LCU என்ற கான்செப்ட்டை உருவாக்கி இருந்தார். அதில் “கைதி” திரைப்படத்தின் ரெஃபரென்ஸ் இடம்பெற்றிருந்தது. அதே போல் “லியோ” திரைப்படமும் LCU-ல் இணையவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் “விக்ரம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த கமல்ஹாசனும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவும் “லியோ” படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் “லியோ” திரைப்படம் LCU-க்குள் வருமா? வராதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படம் குறித்த ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வருகிற ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் எனவும் ஒரு தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கமல்ஹாசன் ஏற்கனவே “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கும் டிரைலருக்கும் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து “லியோ” திரைப்படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளதாக செய்திகள் வருகிறது. இதன் மூலம் “லியோ” திரைப்படம் ஒரு வேளை LCU-க்குள் வருமோ என்ற சந்தேகத்தை தற்போது கிளப்பியுள்ளது.





