- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்சியு-க்குள் அடியெடுத்து வைக்கும் ரவி மோகன்... லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... மாஸான அப்டேட் இதோ...

எல்சியு-க்குள் அடியெடுத்து வைக்கும் ரவி மோகன்… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்… மாஸான அப்டேட் இதோ…

- Advertisement -

அண்மையில் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து வருகின்றன. போதாக்குறைக்கு அவருக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு, சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் தனது தோழி கெனிஷாவுடன் அவர் பொதுவெளியில் தோன்றி வருகிறார். அது மட்டுமல்ல, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார் ரவி மோகன்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, அதர்வா, எஸ் ஜே சூர்யா, இயக்குனர்கள் சுதா கொங்கரா, தமிழ், நடிகை ஜெனிலியா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதாக அறிவித்தார்.

- Advertisement -

அதில் ஒரு திரைப்படத்திற்கு bro code என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் இந்த திரைப்படத்தில், ரவி மோகனே கதாநாயகனாக வருகிறார். எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல் தனது தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கு an ordinary man என தலைப்பு வைத்திருக்கிறார் ரவி மோகன்.

இந்தத் திரைப்படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார். இந்த இரண்டு அறிவிப்புகளுமே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோக அவரது இயக்கத்தில் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனுடன் தனித்தனி திரைப்படத்தை உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் ரவி மோகன். இப்படியான சூழலில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

அதாவது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தில், ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அவரும் ராகவா லாரன்ஸும் ஹீரோக்களாக படத்தில் வருகிறார்கள். நிவின்பாலி வில்லனாக நடிக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த திரைப்படம் எல் சி யு ஃபார்மட்டிற்குள் வருகிறது.

இதனால் ரவி மோகன் எல் சி யு வுக்குள் வருவது உறுதியாகிவிட்டது. அது மட்டுமல்ல கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திலும் ரவி மோகனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எல்சியுவுக்குள் இன்னும் பிற முக்கிய நடிகர் நடிகைகள் வர இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்