- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்... இணையத்தில் வைரலான புகைப்படம்... காரணம் இதுதான்...

திடீரென ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்… இணையத்தில் வைரலான புகைப்படம்… காரணம் இதுதான்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களாக இருந்து வருகின்றனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். 1980 களில் விறுவிறுப்பாக இருந்த இவர்களது பயணம் இன்னும் சுறுசுறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இருவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் கூட கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியானது. மணி ரத்தினம் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், சிம்பு திரிஷா நாசர் அபிராமி ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் ஓடவில்லை. இதனை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

- Advertisement -

இதில் அவர் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்பயணம் ஒரு பக்கத்தில் இருக்க அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்காக அவர் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்தார். 2018 ஆம் ஆண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து வந்த கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு எதிராக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, அவரது அரசியல் நிலைப்பாடு மாறியது. மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பலர் வெளியேற, அவரும் பல சமயம் திரைத்துறையிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார் கமல்ஹாசன். அப்போது அவருக்கு மாநிலங்களவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சொல்லியது போலவே அவருக்கு மாநிலங்களவை எம் பி சீட் கொடுத்தது திமுக. இதை அடுத்து வரும் 25ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் சூழலில், கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்தேன் மகிழ்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்