- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இப்போது நல்ல இசையை தரவில்லையா? இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆவேசம்!

நான் இப்போது நல்ல இசையை தரவில்லையா? இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் ஏஆர் ரகுமான். இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தில் அவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த சின்ன சின்ன ஆசை சிறகடி ஆசை பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் சமீபகாலமாக ஏஆர் ரகுமான் தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் உருவாகும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த சூழலில் மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் சாவா. சாவா படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

சாவா திரைப்படத்தின் இசை குறித்து எழுந்துள்ள கடும் விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மிகவும் அழுத்தமான தனது பதிலை கூறியிருக்கிறார். இதுகுறித்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியதாவது, ஒரு வரலாற்று படத்திற்கு இசையமைக்கும் போது அந்த காலகட்டத்தின் ஆன்மாவை சிதைக்காமல் அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். நான் எப்போதும் பரிசோதனைகளை அதாவது எக்ஸ்பிரிமென்டுகளை விரும்புபவன்.

இந்த படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல. இது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வு பூர்வமாக நான் அணுகியுள்ளேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அவை ஒரு கலைஞனை செதுக்கும். ஆனால் ஒரு படைப்பை முழுமையாக பார்த்தபிறகு அதன் பின்னணியை புரிந்து கொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.

- Advertisement -

சாவா படம் பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வீரத்தை காட்டுவது தான் அந்த படத்தின் மைய கருவாக நான் பார்க்கிறேன். இந்த படத்திற்கு நான் ஏன் தேவை என அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டேன். நீங்கள் மட்டும் தான் இந்த படத்திற்கு தேவை என்று அவர் பதில் அளித்தார். இப்போது சிலர் 90களில் காலகட்டத்தில் வெளியான ரோஜா படம் மாதிரி நல்ல இசை கொடுத்தீர்கள் என்று சொல்கிறார்கள்.

அதைக் கேட்கும் போது இப்போது நான் நல்ல இசையை தரவில்லையா என்கிற எண்ணம் உருவாகிறது. அது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. கடந்த 6 ஆண்டுகளில் நான் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இப்போது எனக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது என்று ஏஆர் ரகுமான் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்