- Advertisement -
Homeபொழுதுபோக்குமாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு, தயாரிப்பாளர் சிவா பேசிய பழைய வீடியோ வைரல் -...

மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு, தயாரிப்பாளர் சிவா பேசிய பழைய வீடியோ வைரல் – சூர்யா, கார்த்தியை பத்தி இவ்வளவு மோசமாக பேசினாரா ஞானவேல் ராஜா?

- Advertisement -

சிலருக்கு நேரம் சரியில்லை என்றால், நாக்கில் சனி என்பார்கள். அப்படித்தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் சூழல் இப்போதைக்கு இருக்கிறது போல என்று கருதும் அளவுக்கு அவருக்கு எதிரான விமர்சனங்கள் மிக கடுமையாக வலுத்து வருகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் அவரை கழுவி கழுவி ஊற்றுவது சமூக வலைதள பக்கங்களை நிரப்பி வருகிறது.

ஜப்பான் பட விழாவுக்கு ஏன் நீங்கள் செல்லவில்லை என்ற கேள்விக்கு, பருத்திவீரன் தயாரிப்பு தொடர்பான கோர்ட் வழக்கு 17 ஆண்டுகளாக நடக்கிறது. அதனால் நான் போக முடியாது என்று மட்டுமே, இயக்குநர் அமீர் நாகரிகமாக பதில் அளித்தார். மற்றபடி ஒரு வார்த்தை கூட அவர் மிகையாக பேசவில்லை.

- Advertisement -

ஆனால் அதற்கு பதிலளிக்க நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மிகவும் ஆணவத்துடன் இயக்குநர் அமீரை மிக தரக்குறைவாக விமர்சித்தார். படம் தயாரிக்க கொடுத்த பணத்தை திருடியவர் என்ற இழிவான வார்த்தைகளை பகிரங்கமாக சொன்னார். சமுத்திரக்கனி, சசிக்குமார், நடிகர் பொன்வண்ணன், கரு பழனியப்பன், கவிஞர் சிநேகன், தயாரிப்பாளர் கணேஷ் ரகு என பலரும் அமீருக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் டி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை, ப்ளூ சட்டை மாறன் தேடி எடுத்து பதிவிட, அந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது. அதில் ஞானவேல் ராஜா தன்னிடம் பேசிய பல விஷயங்களை மிக வெளிப்படையாக தயாரிப்பாளர் டி சிவா பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதில் சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் படம் எடுத்த போது, டேட் பிரச்னை என்று என்கிட்ட வந்து அழுவார்.. நாங்க தான் சமரசம் பேசி அனுப்பி வைப்போம். ஆனா வெளிய போய் எங்களை பத்தியே தப்பா பேசுவார். நடிகர் சூர்யா, கார்த்தியை வெச்சு படம் பணணி எனக்கு நிறைய நஷ்டம் வந்துடுச்சு. இதனால மத்த நடிகர்கள் என் கம்பெனி தயாரிப்புல நடிக்க வர மாட்டேங்குறாங்கன்னு புலம்புவார்.

ஒரு பைனான்சியர் கிட்ட பணம் வாங்கி, மற்ற பைனான்சியருக்கு படம் பண்ண கொடுப்பார். அப்புறம் அந்த பணத்தை பிரச்னை பண்ணிதான் வாங்குவார். எந்த படத்தையும் சொந்த பணத்தை போட்டு அவர் எடுக்க மாட்டார். இதனால் சூர்யா, சிவக்குமார் குடும்பத்துக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுத்தினார் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறித்து தயாரிப்பாளர் டி சிவா பேசிய அந்த வீடியோவை பகிர்ந்து, ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியுள்ளார். அது, சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி பற்றி எரிகிறது.

- Advertisement -

சற்று முன்