- Advertisement -
Homeபொழுதுபோக்குநாயகன் அப்போ நழுவ விட்டதை இப்ப கப்புன்னு புடிச்சிட்டாரு, ஒரு நாள் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா...

நாயகன் அப்போ நழுவ விட்டதை இப்ப கப்புன்னு புடிச்சிட்டாரு, ஒரு நாள் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா – இதுதாங்க இப்போ லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று நடிகர் நடிகையர் வாங்கும் சம்பளம் பற்றி கேட்டாலே தலை சுற்றி விடுகிறது. அதுவும் உச்ச நட்சத்திரங்களாக வருபவர்களின் சம்பளம், கோணிப்பைகளில் கட்டி எடுத்துவரும் அளவுக்கு உள்ளது. ஏனென்றால், 2000 ரூபாய் பயன்பாட்டில் இல்லை. 500 ரூபாய் தாள்களாக எடுத்துவந்தால், முதுகில் மூட்டைகளாக தான் சுமந்து வர வேண்டும்.

ஜெயிலர் படத்துக்கு ரஜினி சம்பளம் ரூ. 110 கோடி, ரஜினி 170 படத்துக்கு ரூ. 90 கோடி. விஜய் லியோ படத்துக்கு சம்பளம் ரூ. 125 கோடி, விஜய் 68 படத்துக்கு ரூ. 200 கோடி, கமல் சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி, அஜீத் விடாமுயற்சி படத்துக்கு ரூ. 105 கோடி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்துக்கு ரூ. 160 கோடி என்பதுதான் தற்போதைய நிலவரமாக உள்ளது. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 10 கோடியாக உள்ளது.

- Advertisement -

மாதந்தோறும் வெயிலில், மழையில், காடுகளில், ரோடுகளில் அலைந்து திரிந்து, வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண தொழிலாளர் மக்களின் பொருளாதார நிலை இன்னும் மாதம் ரூ. 25 ஆயிரத்தை கூட கடக்காத நிலையில், அவர்களது வாழ்வாதாரம் இருக்கிறது. ஆனால், ஒரு படத்துக்கு இப்படி நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களை பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். இந்த படத்தில் கமல், தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி, நெடுமுடி வேணு போன்றவர்கள் நடித்த இந்த படம், அந்த காலத்தில் பிளாக்பஸ்டர் மூவியாக பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதையடுத்து, அந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கினார். கமல் நடித்த இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இப்போதைய சூழலுக்கு ஏற்ப படத்தை அப்டேட் செய்து எடுத்ததால், அதுவே இந்தியன் 3 படமாக மாறி விட்டது. அதனால் அதை அப்படியே எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு, இந்தியன் 2 படத்துக்கான காட்சிகளை ரீ ஷூட் செய்கின்றனர்.

இதற்காக கமலிடம் கால்ஷீட் கேட்க, அதற்காக அவர் கேட்ட சம்பளம் ரூ. 120 கோடி. மொத்தம் 60 நாட்கள் எடுக்கப்படும் ரீஷூட்டில், கமல் கால்ஷீட் 20 நாட்கள்தான். ஆக, தினமும் ரூ. 6 கோடி வீதம், 20 நாட்களுக்கு ரூ. 120 கோடி சம்பளம் பெறுகிறார் உலக நாயகன். இந்தியன் 2 படத்தில் நடிக்க பல ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த படத்துக்கு கமல் பெற்ற சம்பளம் ரூ. 30 கோடி என்ற நிலையில், அன்று நழுவ விட்டதை, இன்று வட்டியுடன் மொத்தமாக ரூ. 150 கோடியாக சேர்த்து வசூலித்து விட்டார் கமல்.

- Advertisement -

சற்று முன்