- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை இன்டஸ்ட்ரியை விட்டே அனுப்பிடலாமுன்னு முடிவு பண்ணீட்டிங்களா, கோபப்பட்ட ரஜினி, புரியவைத்த கமல் -...

என்னை இன்டஸ்ட்ரியை விட்டே அனுப்பிடலாமுன்னு முடிவு பண்ணீட்டிங்களா, கோபப்பட்ட ரஜினி, புரியவைத்த கமல் – என்ன தலைவரே நடந்துச்சு?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்தபடியாக ரஜினி கமல் இன்றும் ரசிகர்களால் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்படும் ஸ்டார் நடிகர்களாக இருக்கின்றனர். ஆனால் ரஜினிக்கும், கமலுக்கும் அடிப்படையிலேயே நிறைய வித்யாசங்கள் உண்டு. ரஜினி ஆன்மிகவாதி, கமல் பகுத்தறிவுவாதி. ரஜினி ஜாலியான படங்களில் நடிப்பார், கமல் ரிஸ்க் ஆன படங்களில் நடிப்பார்.

ரஜினி டிவி ஷோக்களில் தலைகாட்டுவதே சிரமம்; கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். கமலுக்கு, சினிமா தொழில்நுட்பத்தில் அனைத்து விஷயங்களும் அத்துப்படி. ஆனால், ரஜினி நடிப்பில் மட்டுமே முழு கவனம் காட்டுவார். கமல் அரசியல்வாதி, ரஜினி அப்படியல்ல. இப்படி மாறுபட்ட கோணங்கள் இருந்தாலும், ரஜினி கமல் சினிமாவை தாண்டியும் மிக நெருக்கமான நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில், ஆரம்ப காலக்கட்டத்தில் ரஜினி படங்கள் நன்றாக ஓடிய நிலையில், தன் சம்பளத்தை உயர்த்துவதா, வேண்டாமா என குழப்பத்தில் இருந்த போது, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் ரஜினி சம்பளத்தை ரூ. ஒரு லட்சமாக உயர்த்திக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு சில லட்சங்கள் மட்டுமே ரஜினியின் சம்பளமாக இருந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒருகால கட்டத்தில், ரஜினி படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று ஓடிக்கொண்டு இருந்தன. எங்கு திரும்பினாலும் ரஜினி புகழ் பாடிய ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இப்போது விஜய்க்கு இருப்பதை விட பலமடங்கு ரசிகர்கள், ரஜினியை கொண்டாடி தீர்த்தனர். ரஜினி படம் ரிலீஸ் என்றாலே, அன்று ரசிகர்களுக்கு தீபாவளி.

இப்படி ஒரு சூழலில் ரஜினியும் கமலும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்த போது, ரஜினியிடம், நீங்கள் இனிமேல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் கமல். அதிர்ச்சியடைந்த ரஜினி, என்ன, என்னை இன்டஸ்ட்ரியை விட்டே அனுப்பிடலாமுன்னு முடிவு பண்ணீட்டிங்களா, என்று சற்று கோபமாக கமலிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு கமல், உங்களது மார்க்கெட் வேல்யூ உங்களுக்கே தெரியவில்லை. உங்களது படங்கள் பெரிய அளவில் லாபம் தருகின்றன. அதை தயாரிப்பாளர்கள் குறைத்துக்காட்டி, உங்கள் நடிப்புக்கான சம்பளத்தை தருவதில்லை. அதனால், இனிமேல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் என தைரியமாக கேட்டு வாங்குங்கள் என கூறியிருக்கிறார் கமல். பின்புதான், தனது வேல்யூ புரிந்து, சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் ரஜினி. இதுபோன்ற உயர்ந்த நட்பை, கமலின் பெருந்தன்மையை இப்போதைய நடிகர்களால் காட்டவே முடியாது.

சற்று முன்