- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்தில் கமல் - சிம்பு கேரக்டர்கள் இதுதானா? கசிந்த தகவல் உண்மைதானா? - ஆனா...

தக்லைஃப் படத்தில் கமல் – சிம்பு கேரக்டர்கள் இதுதானா? கசிந்த தகவல் உண்மைதானா? – ஆனா பல படங்களில் ஏற்கனவே இப்படி பார்த்துட்டோமே…

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிகர் சிம்புவும் இணைந்து நடித்துள்ள முதல் படம் தக்லைஃப். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். நாயகன் படத்துக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் கமல் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர்.

தற்போது தக்லைஃப் படத்தின் பிரமோஷன் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் நடிகர் கமல்ஹாசன் பிஸியாக இருந்து வருகிறார். பிற மாநிலங்களில் இருந்து மீடியாவை சென்னைக்கு விமானத்தில் வரவழைத்து நேர்காணல் கொடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் அவரே நேரில் சென்று தக்லைஃப் படம் குறித்து பேச இருக்கிறார்.

- Advertisement -

தக்லைஃப் படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் ஒன்று லேட்டஸ்ட் அப்டேட்டாக கசிந்துள்ளது அப்பா மகன் மோதல் கதைதான் தக்லைஃப் படத்தின் கதை என்கின்றனர். அப்பாவாக கமலும் மகனாக சிம்புவும் மோதுவது தான் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. மணிரத்னம் இதற்கு முன் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் கூட இப்படிப்பட்ட கரு தான் மையமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மணிரத்னம் கமல்ஹாசன் 37 ஆண்டுகளுக்கு பின் இணைந்திருப்பதால் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. இது ஆக்சன் படமாக இருந்தாலும் எமோஷனல் காட்சிகளுக்கும் நிறைய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக கமல் சிம்பு இணைந்து நடித்த காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் என்று படக் குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் படத்தின் மையக்கரு படத்தின் முக்கிய காட்சிகள் குறித்து படம் வெளியாவதற்கு முன்பு மீடியாக்களில் பேசக்கூடாது, எந்த தகவலையும் படக் குழு தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு மீடியா மூலமாக சென்று சேரக்கூடாது என்பதில் இயக்குனர் மணிரத்னம் மிகவும் கறாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் படத்தின் சுவாரசியம் அதனால் போய்விடும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

எனினும் தக்லைஃப் படம் அப்பா மகன் மோதல் கதை தான் என்றால் கடந்த 1980, 90 களிலேயே பல படங்கள் இப்படி வந்திருக்கின்றன. தங்கப்பதக்கம் ஜெயிலர் படம் வரை பல படங்களை உதாரணமாக சொல்லலாம். கடந்தாண்டில் கூட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் விஜய் நடித்த படத்திலும் அப்பாவாக விஜய் மகனாக விஜய் மோதிக்கொண்டது ரசிகர்களுக்கு இன்னும் மறந்திருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்