- Advertisement -
Homeபொழுதுபோக்குவம்பில் மாட்டிவிட்ட கமல்ஹாசன், சிக்கலில் தவிக்கும் சிவகார்த்திகேயன் - எந்திரிக்கவே முடியாத அளவுக்கு இந்த அடி...

வம்பில் மாட்டிவிட்ட கமல்ஹாசன், சிக்கலில் தவிக்கும் சிவகார்த்திகேயன் – எந்திரிக்கவே முடியாத அளவுக்கு இந்த அடி அடிக்கறாங்களே?

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது கேரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். சினிமா விழாக்கள், விருது விழாக்களை தொகுத்து வழங்கினர். நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்தார். அப்படி நடிகர் தனுஷ், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரை நேர்காணல் செய்த போது அவர்களது நட்பை பெற்றார்.

அதன்பின், மெரினா என்ற படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தார். ஜோடியாக ஓவியா நடித்தார். படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து எதிர்நீச்சல், மனம்கொத்தி பறவை போன்ற படங்களின் மூலம் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றார். இந்த படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, மான் கராத்தே என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் தனுஷ்க்கு போட்டியாளராக உருவாகினார். டாக்டர், மாவீரன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த படம் அயலான், தோல்வி அடைந்ததால் சிவகார்த்திகேயன் அப்செட் ஆனார்.

இதற்கிடையே இசையமைப்பாளர் டி இமான் கிளப்பி விட்ட துரோகம் விவகாரம், சிவகார்த்திகேயன் 50 சதவீத இமேஜை காலி செய்தது. டான், ஹீரோ, மிஸ்டர் லோக்கல், சீமராஜா, பிரின்ஸ் போன்ற படங்களும், சிவகார்த்திகேயன் வெற்றிப்பட நாயகன் என்ற இமேஜை ஏற்கனவே சின்னாபின்னமாக நொறுக்கி இருந்தது. அயலான் படமும் ஊத்திக்கொண்டது.

- Advertisement -

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான அமரன் படத்தை தான் சிவகார்த்திகேயன் பெரிய அளவில் நம்பியிருக்கிறார். ஆனால் படம் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, இது 1992ம் ஆண்டில் நவரச நாயகன் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் வெளியான படம் ஆச்சே. பிளாப் ஆன இந்த டைட்டிலை வெச்சுட்டாங்களே, என பயங்கரமாக கலாய்த்தனர்.

படம் டைட்டில் இப்படி ஆன நிலையில், வெளியான அமரன் படம் டீசரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி, சில இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் போராட்டத்தில் குதித்து அமரன் படத்தை தடை செய்க, படத்தில் நாயகன் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கமல், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்க என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடைசியில் கமல்ஹாசன் நம்மை வம்பில் மாட்டி விட்டுட்டாரே, எந்திரிக்கவே முடியாத அளவுக்கு இப்படி பிரச்னை மேல் பிரச்னை வந்துகிட்டே இருக்கே என, அப்செட்டில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சற்று முன்