- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு வெற்றிப் படம் கொடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்த படம் என்ன? எஸ்கே உடனே ஓகே...

விஜய்க்கு வெற்றிப் படம் கொடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்த படம் என்ன? எஸ்கே உடனே ஓகே சொன்னால் அது… இல்லை என்றால் சொந்த சரக்குதான் – இதுதான் லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற மிகப்பெரிய பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்து, விஜயையும் விஜய் ரசிகர்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார். இந்த படம் வெளியான நான்கு நாட்களில் 275 கோடி ரூபாய் வசூலில் சாதித்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தி கோட் படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து விடும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டைரக்டர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போதுதான் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிங்க நடை என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பும் இப்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து, டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை முடித்துக் கொண்ட பிறகு, சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

அத்துடன் நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பதாக இருந்த புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டார். இப்போது அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்டது. இது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்துக்கு புறநானூறு என்பதற்கு பதிலாக வேறு பெயர் வைக்கப்பட உள்ளது.இந்த படம் தான் சிவகார்த்திகேயனின் 25 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் தொடர்ந்து சிவகாத்திகேயவுக்கு நான்கு படங்கள் லைன் அப்பில் இருப்பதால் இந்த படங்களை எல்லாம் முடிக்க ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படலாம். அதனால் இப்போதைக்கு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த படங்கள் எல்லாம் ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்கள் என்பதால் இந்த படங்களை முடித்த பிறகு வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியும்.

ஆனால் தி கோட் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த வெங்கட் பிரபு அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை காத்திருந்தால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகி விடும். அதனால் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுக்காக இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க நேர்ந்தால், அந்த இடைவெளியில் தனது சொந்த சரக்கான சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சென்னை 28 முதல் பாகம், இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

சற்று முன்