- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் ஆதரவு இல்லாமல் லஞ்சம், ஊழல் நடக்குமா?, இந்தியன் 2 விழாவில் கமல் எழுப்பிய சர்ச்சையான...

மக்கள் ஆதரவு இல்லாமல் லஞ்சம், ஊழல் நடக்குமா?, இந்தியன் 2 விழாவில் கமல் எழுப்பிய சர்ச்சையான கேள்வி – 100 சதவீத அரசியல்வாதியாக மாறிட்டாரே..?

- Advertisement -

கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இயக்கிய மிக முக்கியமான படங்களில் இந்தியன் படமும் ஒன்று. இந்த படத்தில் இந்தியன் தாத்தா கேரக்டரில் நடித்த கமல்ஹாசனுக்கு 3வது முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியன் 2 படம், வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து இந்தியன் 3 படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பிலேயே இந்தியன் 3 படப்பிடிப்பையும் எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் ஷங்கர் என்பது, ஒரே கல்லில் 3 மாங்காய் என்று பலரும் ஷங்கரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்று சென்னையில் இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் டைரக்டர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் பேசியதாவது, கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் படத்தின் டப்பிங் நடந்த போதே, இந்தியன் 2ம் பாகம் குறித்து பேசினோம். இந்தியன் 2 படத்துக்கான கருவை இன்றும் எங்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் இந்த ஊழல் அதிகமானதால்தான், இந்தியன் தாத்தாவின் 2ம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது.

- Advertisement -

நானும் இயக்குனர் ஷங்கரும் நினைத்தாலும் இதுபோன்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்க முடியாது என்று ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கூறினார். ஆனால் நாங்கள் எடுத்திருக்கிறோம், அதுதான் இந்தியன் 3ம் பாகம். நாட்டில் ஊழல் அதிகமானதற்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; நாமும்தான் காரணம். நாம் இல்லாமல், நம் உதவியில்லாமல் ஊழல்கள் நடக்குமா, என்று பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சிக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு பேசுகையில், விபத்துகள் நடக்கிறது என்பதற்காக, வாகன போக்குவரத்தை நிறுத்த முடியுமா, என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது, ஊழல் நடக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களும்தான் காரணம் என்று மக்கள் மீதே பழிபோட்டு அவர் பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 சதவீத அரசியல்வாதியாக கமல் மாறிவிட்டார் என்று அவரது ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்