நடிகர் விஜய் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, தனது அரசியல் வருகை குறித்து திடீரென அறிக்கை மூலம் அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள அவர், வருகிற 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், திடீரென அவர் அறிக்கை வெளியிட்டது திமுக, அதிமுக கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஏனெனில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நினைப்பில் இருந்தது.
திமுக ஆட்சியில் நிறைய குறைகளும், ஏமாற்றங்களும் மக்களுக்கு இருப்பதால் அதையே முன்னிறுத்தி, எப்படியும் இந்த முறை விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என அதிமுகவும் தீவிர முயற்சியில் இருந்த நிலையில், இப்படி சினிமா ஹீரோ, அரசியல் வில்லனாக மாறுவார் என திமுக, அதிமுக கட்சிகள் எதிர்பார்க்கவில்லை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது, அவருக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. அதன்பிறகு 2005ம் ஆண்டில் கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கிய போதும் மக்களின் பேராதரவு அவருக்கு கிடைத்தது. ஏனெனில், திமுக. அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக, புதியதாக ஒருவர் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். இவர் கட்சி துவங்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதே போல் கட்சி ஆரம்பித்த போதும் பெரிய அளவில் கமலை யாரும் வரவேற்கவில்லை. ஏனெனில் சொந்த வாழ்க்கையில் கமல் மீது யாருக்கும் பெரிதாக நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால் அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் எந்தவிதமான ரியாக்சனும் இல்லை.
ஆனால் கமலை விட 20 வயது இளையவரான நடிகர் விஜய்க்கு கட்சியை துவங்கியதாக கூறியதில் இருந்தே, திமுக,அதிமுக இரண்டு கட்சிகளையும் நம்பி, நம்பி பல ஆண்டுகளாக ஏமாந்து விட்டோம். அதனால் விஜய் வரட்டும். நிச்சயம் விஜய் வந்தால், தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரும் என்று மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. விஜய்க்கு கிடைத்த இந்த அங்கீகாரமும், மரியாதையும் நமக்கு கிடைக்கலையே, என கடந்த ஒரு வாரமாக பயங்கர அப்செட்டில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.





