- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கதையை நான் இயக்குவேனா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் நடிக்கும் படத்தை கண்டிப்பாக...

அந்த கதையை நான் இயக்குவேனா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் நடிக்கும் படத்தை கண்டிப்பாக நான் இயக்குவேன் – இயக்குனர் சசிக்குமார் சொல்வது யாரை தெரியுமா? அப்போ தரமான சம்பவமா இருக்குது

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் சசிக்குமார் மிகவும் கவனிக்கப்பட்ட நல்ல படைப்பாளியாக இருக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் நடிகராகவும் காலடி பதித்த அவர், நாடோடிகள் படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். சுந்தரபாண்டியன், பேட்ட, குட்டிப்புலி, ஈசன், அயோத்தி, கருடன் என பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.

இயக்குனர் சரவணன் இயக்கத்தில், சசிக்குமார் நடித்த நந்தன் படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத வித்யாசமான ஒரு கேரக்டரில், கெட்டப்பில் சசிக்குமார் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

நந்தன் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் கூறியதாவது, குற்றப்பரம்பரை நாவலை திரைப்படமாக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அப்போது இந்தக் கதையை முதலில் இயக்க திட்டமிட்டு இருந்தவர்கள் என்கிற முறையில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தை சொன்னேன். இருவரும் எனக்கு அனுமதி கொடுத்தனர்.

அந்த நாவலின் காப்புரிமை பெற்றிருந்த பாலா அதை எனக்காக கொடுத்தார். அதனை இணையத் தொடராக எடுக்க நினைத்தோம். அதற்காக மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

குற்றப் பரம்பரையின் கதைக்காக சண்முக பாண்டியனிடம் தலைமுடியை நீளமாக வளர்க்கச் சொன்னேன். அவரும் வளர்த்தார். படத்திற்காக போட்டோ சூட் எடுத்த போது விஜயகாந்த் போன்றே சண்முக பாண்டியன் இருந்தார். ஆனாலும் எனது படப்பிடிப்பு தாமதமான சூழலில், அவரே வந்து படைத்தலைவன் படத்தில் நடிக்க என்னிடம் ஒப்புதல் கேட்டார். நானும் சரி என்றேன்.

விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே என் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்க வேண்டும். அது நடக்காமல் போய்விட்டது. அந்த வருத்தம் இன்றும் எனக்கு நீடிக்கிறது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை கண்டிப்பாக இயக்குவேன் என்று சசிகுமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்