- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 நாட்களில் எகிறிய காந்தி கண்ணாடி படம் வசூல்… ஹீரோவாக கேபிஒய் பாலாவுக்கு ரசிகர்கள் தரும்...

2 நாட்களில் எகிறிய காந்தி கண்ணாடி படம் வசூல்… ஹீரோவாக கேபிஒய் பாலாவுக்கு ரசிகர்கள் தரும் அமோக ஆதரவு – இதுவரை நிலவரம் என்ன?

- Advertisement -

சின்னத்திரை பிரபலமாக வலம் வந்துக்கொண்டிருந்த கேபிஒய் பாலா இப்போது சினிமாவில் கதாநாயகனாக மாறிவிட்டார். 18 படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த அவரை இயக்குனர் ஷெரீப் தனது காந்தி கண்ணாடி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

காந்தி கண்ணாடி படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். முன்னணி கேரக்டர்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

60வது வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா தம்பதியிடம் அதற்கான பணம் இருந்தும், மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்த பணத்தை திருமண விழாவுக்கு செல்விட முடியாத சிக்கலான சூழல் ஏற்படுகிறது. அப்போது ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் படத்தின் நாயகன் கேபிஒய் பாலா, எப்படி அவர்களது திருமணத்தை நடத்து திட்டமிடுகிறார், திருமணம் நடந்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதையாக உள்ளது.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறும்போது பெரும்பாலும் அதுவும் காமெடி கலந்த ஒரு ஹீரோயிசம் கொண்ட படமாக தான் இருப்பது வழக்கம். ஆனால் கேபிஒய் பாலா, கடைசியில் ரசிகர்களை அழவைக்கும் அளவுக்கு ஒரு சென்டிமென்ட் படத்தில் நடித்து தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை தொட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி நடிகை அனுஷ்கா நடித்த காதி ஆகிய படங்களுடன் கடந்த 5ம் தேதி காந்தி கண்ணாடி படமும் வெளியானது. இதில் மதராஸி படத்துக்கு கிடைத்த வரவேற்பை போலவே காந்தி கண்ணாடி படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள், பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் நாளில் காந்தி கண்ணாடி படம் மொத்தமாக ரூ. 35 லட்சம் வசூலித்தது. 2ம் நாளில் நேற்று இந்த படம் 45 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. 2 நாட்களில் மொத்த வசூல் 80 லட்சம் ரூபாய் கடந்த நிலையில், இன்று ஞாயிறு தினத்திலும் நல்ல கூட்டம் இருப்பதால் எப்படியும் 1.30 கோடி ரூபாய் வரை காந்தி கண்ணாடி படத்தின் வசூல் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்