- Advertisement -
Homeபொழுதுபோக்கு38 ஆண்டுகளுக்கு முன் வந்த நாயகன் படத்தின் 2ம் பாகம்தான் தக்லைஃப் படமா? - நடிகர்...

38 ஆண்டுகளுக்கு முன் வந்த நாயகன் படத்தின் 2ம் பாகம்தான் தக்லைஃப் படமா? – நடிகர் கமல்ஹாசன் நேரடியாக சொன்ன பதில்!

- Advertisement -

கடந்தாண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. இதனால் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த சூழலில் கமல்ஹாசன் சிம்பு திரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் சில காட்சிகளை பார்க்கும் போது நாயகன் படத்தின் காட்சிகளை ரசிகர்களுக்கு நினைவுபடுத்துகிறது. ஒருவேளை நாயகன் படத்தின் 2ம் பாகம்தான் தக்லைஃப் படமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

- Advertisement -

தக்லைஃப் படம் ரிலீஸாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கமல்ஹாசன் மணிரத்னம் திரிஷா சிம்பு உள்ளிட்டோர் தொடர்ந்து பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் ஒரு பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, அடுத்த தலைமுறை நடிகர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெருமை. அவர்கள் இன்னும் மேலே உயர வேண்டும் என்பதுதான் என் ஆசை. என்னை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். நானும் அவர்களைப் பார்த்து நிறைய விஷயம் கற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

நானும் ஏஐ கற்றுக்கொள்ள அமெரிக்கா போனேன். ஆனால் அது நம்மளை விட பெருசாக இருக்கிறது. அதை முழுமையாக தெரியாமல் நான் பயன்படுத்த மாட்டேன். வாழ்வில் மரணம் தவிர்க்க முடியாதது. அதனால் இருப்பதற்குள் நாம் என்ன பண்ண முடியுமோ அதை செய்து விட வேண்டும்.

தக்லைஃப் படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். மணிரத்னம் எடுக்க நினைத்த சினிமாவை இப்போதுதான் இயக்குகிறார். அவர் அவர் ஸ்டைலில் படத்தை இயக்கியுள்ளார். நான் என்னுடைய ஸ்டைலில் இந்த படத்தில் நடித்துள்ளேன். நாயகன் படத்தின் சாயலே தெரியாத அளவுக்கு இந்த படத்தை எடுத்துள்ளோம். இது நாயகன் படத்தின் தொடர்ச்சி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் பல இடங்களில் கூறி வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்