- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி - இதே நாளில் 32 ஆண்டுகளுக்கு முன்…...

கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி – இதே நாளில் 32 ஆண்டுகளுக்கு முன்… – கொண்டாடி மகிழும் தளபதி ரசிகர்கள் – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி இயக்குனராக இருந்த எஸ்ஏ சந்திரசே்கரின் மகன் நடிகர் விஜய். அதனால் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருக்கிறார். விஜயகாந்த் நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெற்றி என்ற படம் 1984ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன்பிறகு இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். துவக்கத்தில் இயக்குனர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் பரிச்சயமான விஜய் பிறகு படிப்படியாக தன் திறமையை வளர்த்துக்கொண்டு நல்ல கேரக்டர்களில், நல்ல கதைகளில் சிறப்பாக நடித்து முன்னணி நடிகராக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக விஜய் நடித்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, பகவதி, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று, நடிகர் விஜயை முன்னணி நடிகராக மாற்றியது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாக வசூலிக்கும் படங்களில் முதலில் இருப்பது நடிகர் விஜய் படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் வெளியான படங்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த படங்களின் எண்ணிக்கை 9 மட்டுமே. இதில் விஜய் நடித்த தி கோட் படம் மட்டுமே ரூ. 455 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரூ. 325 கோடி வசூலித்து 2ம் இடத்தில் உள்ளது. வேட்டையன் படம் ரூ. 235 கோடி வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.

- Advertisement -

மற்ற படங்களான ராயன், கங்குவா, அரண்மனை 4, தங்கலான், இந்தியன் 2 மகாராஜா ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தாலும் ரூ. 200 கோடி வசூலை எட்டவில்லை. அதனால் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படம், அடுத்த ஆண்டில் ரூ. 1000 கோடி வசூலை கடக்கும், அந்த சாதனையை செய்த முதல் தமிழ் படம், விஜய் படம் என்ற பெருமையை சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1992ம் ஆண்டில் டிசம்பர் 4ம் தேதி, அதாவது இதே நாளில் விஜய் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு வெளியானது. அந்த வகையில் நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் இன்று 32 ஆண்டுகளை நாயகனாக நிறைவு செய்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நாளைய தீர்ப்பு படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார்.

- Advertisement -

சற்று முன்