- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரி ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற மாமன் படம்… ஓடிடி தளத்தில் நாளை...

சூரி ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற மாமன் படம்… ஓடிடி தளத்தில் நாளை 27ம் தேதி வெளியாகிறது!

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து இப்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சூரி. திறமை உழைப்பு இருந்தால் நிச்சயமாக எந்த துறையிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு நடிகர் சூரியை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இன்று ஒரு படத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் இவர், ஆரம்பத்தில் தினமும் 20 ரூபாய் சம்பளத்துக்கு திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்த தொழிலாளி.

மதுரையை சேர்ந்த சூரி, பள்ளியில் படிக்கும் வயதிலேயே திருப்பூருக்கு வேலை தேடி வந்துவிட்டார். திருப்பூரில் பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் எதிரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணி செய்த அவருக்கு தினமும் சம்பளம் ரூ. 140 தான். அதில் 70 ரூபாயை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீதி 70 ரூபாயை தனது செலவுக்கு வைத்துக் கொள்வது அவரது வழக்கம்.

- Advertisement -

சமீபத்தின் மாமன் படம் பிரமோ நிகழ்ச்சிக்கு திருப்பூருக்கு வந்திருந்த நடிகர் சூரியே சொன்ன தகவல்கள்தான் இது. தேங்காய் பன் சாப்பிட ஆசைப்பட்டு நான் ஒரு காலத்தில் அலைந்த ஊர்தான் திருப்பூர் என்றும் வெளிப்படையாக நடிகர் சூரி கூறியிருக்கிறார். இன்று பல ஓட்டல்களுக்கு சொந்தக்காரர், சினிமாவில் முன்னணி நடிகராக சூரி இருந்து வருகிறார்.

காமெடி நடிகராக இருந்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற தனது படத்தின் மூலம் நாயகனாக மாற்றினார். விடுதலை 2 படத்தில் சூரிக்கு பெரிய நடிப்பு வாய்ப்பு இல்லை. தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படமும் சூரிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் விமர்சன ரீதியாக கவனிக்கப்படும் கமர்ஷியல் வெற்றி கிடைக்கவில்லை.

- Advertisement -

அடுத்து நடிகர் சூரி நாயகனாக நடித்த படம்தான் மாமன். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கிய இந்த படத்தின் கதை ஆசிரியர் சூரிதான். தாய் மாமன் உறவை மையப்படுத்திய இந்த படத்தில் சூரி நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தனர். ராஜ்கிரண் பாலசரவணன் சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய மாமன் படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்த வெற்றிப் படமாக இருந்தது. இந்நிலையில் மாமன் படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 27ம் தேதி மாமன் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டரில் மாமன் படத்தை ரசித்த ரசிகர்கள், ஓடிடியிலும் ரசித்து பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 20ம் தேதியே இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் குபேரா போன்ற சில முக்கிய படங்கள் ரிலீஸ் காரணமாக ஒருவாரம் தள்ளி 27ம் தேதி நாளை வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்