- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் கமல் 237 படம் டிராப் ஆனதா? இணையத்தில் தீயாக...

தக்லைஃப் படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் கமல் 237 படம் டிராப் ஆனதா? இணையத்தில் தீயாக பரவும் தகவல் – உண்மை நிலவரம் என்ன?

- Advertisement -

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கம்லஹாசன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்திருந்தார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது.

தக்லைஃப் படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் உடன் சிலம்பரசன் திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியைப் பெறவில்லை.

- Advertisement -

தக்லைஃப் படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் 50 கோடி ரூபாய் கூட வசூலை எட்டவில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க இருந்த கமல் 237 படம் ட்ராப் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தொடர் தோல்வி காரணமாக கமல் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்க ஏற்கனவே கமிட்டாகி இருந்தார். ஆனால் இந்தியன் 2 படம் மற்றும் தக்லைஃப் படம் என பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 2 படங்களுமே அடுத்தடுத்து பலத்த தோல்வியை சந்தித்த நிலையில், தனது 237 படத்தை கமல் கிடப்பில் போட்டு விட்டார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

- Advertisement -

அதே நேரத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் விரைவில் ராஜ்யசபா எம்பி ஆக இருக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலும் நெருக்கி வருகிறது. அதனால் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கமல்ஹாசன் தனது 237 வது படத்தை டிராப் செய்து விட்டார் என்ற தகவல் வைரலானது. ஆனால் இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு வட்டாரம் மறுத்திருக்கிறது,

தக்லைஃப் படத்தை தொடர்ந்து அன்பறிவ் மாஸ்டர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் உருவாவதில் எந்தவித மாற்றமும் இல்லை. தற்போது அந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் ஃப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கப்படுகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் கமல் 237 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் உருவாகிறது. அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடிவடையும் குறுகிய கால பட்ஜெட் படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்