- Advertisement -
Homeபொழுதுபோக்குசனி, ஞாயிறு இரு தினங்கள், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் நடிகர் கமல்ஹாசனின் ஒரு...

சனி, ஞாயிறு இரு தினங்கள், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் நடிகர் கமல்ஹாசனின் ஒரு நாள் சம்பளம் – அதெல்லாம் வேற லெவல் ப்ரோ…

- Advertisement -

விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இப்போது 90 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களில் முடிவடைய உள்ளது. துவக்கத்தில் விசித்ரா தான் பிக்பாஸ் வின்னர் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அர்ச்சனா அல்லது மாயா என பெயர்கள் அடிபடுகின்றன.

விஜய் டிவியில் தமிழில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை துவக்கத்தில் இருந்தே நடிகர் கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார். இப்போது 7வது ஆண்டிலும் அவர்தான் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதும், ரம்யா கிருஷ்ணன் 2 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

- Advertisement -

அடுத்த வாரமே, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வந்துவிட்டார் கமல்ஹாசன். இன்னும் சில வாரங்கள் ஓய்வுக்கு பின் வந்திருக்கலாமே என பலரும் கேட்ட நிலையில், இது என் நிகழ்ச்சி, நான்தான் நடத்துவேன். மருத்துவமனையில் படுத்துக்கொண்டு நான் நிகழ்ச்சியை நடத்தி இருப்பேன். அதற்கு டாக்டர்கள் அனுமதிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசனை பொருத்த வரை நடிப்பானாலும் சரி, இதுபோன்ற பொறுப்புகளாக இருந்தாலும் சரி, அவரது முழு திறமையை, ஆற்றலை, ஒத்துழைப்பை, ஆர்வத்தை வெளிப்படுத்துவார். அந்த விஷயத்தில், தொழிலில் அவர் என்றைக்கும் ஏமாற்றவே மாட்டார். தன்னை பலவீனப்படுத்திக்கொண்டு அவர் பின்வாங்கும் ஒரு நிலையை விரும்பவே மாட்டார்.

- Advertisement -

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு என அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தாலும், அது சனிக்கிழமை ஒரே நாளில் எடுக்கப்படும் படப்பிடிப்புதான். அதாவது சனிக்கிழமை மதியம் வரை எடுப்பது ஒரு பகுதியாகவும், மதியம் முதல் மாலை வரை எடுப்பது ஒரு பகுதியாகவும் ஒளிபரப்பாகிறது.

அதாவது சனிக்கிழமை ஒருநாளில் கமல் பங்கேற்கும் நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு சனி, ஞாயிறு என 2 நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது. அதாவது பார்வையாளர்களுக்கு 2 நாட்கள் கமல் நிகழ்ச்சிக்கு வருவதாக தோன்றினாலும், கமல் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வது ஒரே நாள்தான். அந்த ஒருநாள் பிக்பாஸ் படப்பிடிப்புக்காக கமல் பெறுகிற சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். அதாவது வாரம் ஒருநாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு கோடிேய 50 லட்சம் ரூபாய் கமல் சம்பளமாக பெறுகிறார். நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் வரை ஒவ்வொரு வாரமும் இதுதான் அவரது நிலையான சம்பளம். ஏறக்குறைய 15 முதல் 16 வாரங்கள் எனில், கமல் பெறுகிற மொத்த சம்பளம் ஜிஎஸ்டி வரியினங்கள் உட்பட ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்