- Advertisement -
Homeபொழுதுபோக்குசூசகமாக பொடி வைத்து விஜய் சொன்ன குட்டிக்கதை, ரஜினிக்கு கதை புரிஞ்சிருக்கும் - மற்றவர்களுக்கு அது...

சூசகமாக பொடி வைத்து விஜய் சொன்ன குட்டிக்கதை, ரஜினிக்கு கதை புரிஞ்சிருக்கும் – மற்றவர்களுக்கு அது தெரிஞ்சிருக்குமா?

- Advertisement -

கடந்த 1978ம் ஆண்டில், சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், ரஜினிக்கு பைரவி படத்தில் நடித்த போதே அவருக்கு வழங்கப்பட்டு விட்டது. கலைஞானம் தயாரிப்பில், எம். பாஸ்கர் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். அப்போது சிவாஜி, கமல் என்ற இரண்டு ஜாம்பவான்கள், தமிழ் சினிமாவில் உச்சத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தனர். அதனால், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்தவர்தான் ரஜினி.

ஏறக்குறைய 45 ஆண்டுகளாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என வலம் வரும் ரஜினி, அந்த பட்டத்துக்கு ஏற்ப, தமிழ் சினிமாவில் பல உச்சங்களை தொட்டவர். இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட ரசிகர்களை பெற்றிருக்கிறார். 72 வயதிலும், ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டி நடித்து, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இதற்கிடையே, வாரிசு படத்தின் விழாவில் நடிகர் விஜயை, சூப்பர் ஸ்டார் என சிலர் கூற, அதனால் ரஜினி ரசிகர்கள் வெகுண்டு எழ, பிரச்னை உருவானது. விஜய் – அஜீத் ரசிகர்கள் மோதல் என்ற நிலை மாறி, ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதலால் சமூக வலைதளங்களில் அனல் பறந்தது. ஜெயிலர் – லியோ என மாறி மாறி, தாக்கி ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழ்ந்தும் பதிவுகளை இட்டனர்.

இதற்கிடையே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு – காக்கை கதையும் வேற லெவலில், இப்பிரச்னைக்கு எரிகிற நெருப்பில் நெய் ஊற்றியது போல ஆகிவிட, யார் சூப்பர் ஸ்டார், யார் கழுகு, யார் காகம் என்றெல்லாம் பலவிதமான விமர்சனங்களும், சர்ச்சைகளும், கேள்விகளும் எழுந்து, புயலை கிளப்பிக் கொண்டு இருந்தன.

நேற்று நடந்த லியோ பட வெற்றிவிழாவில், நடிகர் விஜய் இதற்கெல்லாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். புரட்சித்தலைவர், நடிகர் திலகம், தல, பரட்சிக்கலைஞர் கேப்டன் என்றாலே அவர்கள் ஒருவர்தான் என்பதுபோல, சூப்பர் ஸ்டாரும் ஒருவர்தான். அது அவர்தான். நான் என்றும் ரசிகர்களின் தளபதி என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அதே வேளையில், அவர் சொன்ன குட்டிக் கதையில் வேட்டைக்கு சென்ற இருவர் காட்டுக்குள் இருந்த சிங்கம், புலி, கரடி, மான், கழுகு, முயல் யானை இவற்றில் ஒருவர் முயலை வேட்டையாடினார், ஒருவர் யானைக்கு குறிவைத்து, மிஸ் ஆகி விட்டது. யானையை குறிவைத்தவர்தான் வெற்றியாளர் என குறிப்பிட்டார். அதாவது, காட்டுக்குள் கழுகு இருந்தும் அதை குறி வைக்காமல், யானை (அரசியல்) தான் வேட்டைக்காரனுக்கு முக்கியம். கழுகு அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என கண்டுகொள்ளாமல் விட்டதை சொல்கிறார். விஜய் ஏற்கனவே, வேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்தவர். எனவே, இந்த குட்டிக்கதையில் ரஜினியின் பட்டம் முக்கியமல்ல, அரசியல் வெற்றியே முக்கியம் என, சூசகமாக தெரிவித்து விட்டார் விஜய்.

சற்று முன்