- Advertisement -
Homeபொழுதுபோக்கு100 கோடியை நோக்கி முன்னேறும் கங்குவா... மெகா ப்ளாக் பஸ்டர் என மார்த்தட்டும் தயாரிப்பு நிறுவனம்......

100 கோடியை நோக்கி முன்னேறும் கங்குவா… மெகா ப்ளாக் பஸ்டர் என மார்த்தட்டும் தயாரிப்பு நிறுவனம்… ஆனா யாரு தான் பாக்குறாங்கன்னு தெரியல…

- Advertisement -

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அடி மேல் அடி வாங்கி வருகிறது. பிரம்மாண்டம் என்ற பெயரில் இப்படி ஒரு படத்தையாய் எடுப்பீர்கள் என்று பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். அதிலும் படம் வெளியாவதற்கு முன்பு பிரமோஷன் நிகழ்ச்சியில், படக்குழுவினர் பேசியதை தற்போது எடுத்து விட்டு அவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

 

- Advertisement -

இதில் மிக முக்கியமாக பேசுவது சூர்யாவை தான். கங்குவா திரைப்படம் வெளியானால் அனைவரும் வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று கூறியிருந்தார் நாயகர். இந்தப் பதிவை குறிப்பிட்டு பலரும் தற்போது நக்கல் அடித்து வருகிறார்கள். சூர்யாவை கூட விட்டாலும் விடுவார்கள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை இங்கு எவரும் விடுவதாக இல்லை.

 

- Advertisement -

அவர் கடந்த காலங்களில் பேசிய வீடியோ ஒவ்வொன்றையும் தோண்டி எடுத்து, கலாய்த்து சிலாகித்து வருகிறார்கள். ஒரு பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, கங்குவாவுடன் வேண்டுமானால் எந்த திரைப்படங்களும் மோதும் ஆனால் கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் வரும்போது எந்த திரைப்படமும் வராது என்று பேசி ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

 

அதேபோல் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் கூடிய போது, இந்தப் பாசை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் நடைபெறும் வெற்றி விழாவில் இது தேவைப்படும் என்று கூறி சிலாகித்தார். இப்படி வம்படியாக மாற்றிக்கொண்ட ஞானவேல் ராஜாவை, இணையதளவாசிகள் வைத்து செய்கிறார்கள்.

 

சிறுத்தை சிவாவும் இந்த லிஸ்டில் முதலாவது ஆளாக இருக்கிறார். தன் தவறை உணர்ந்து கொண்டு, அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், இப்போதும் படம் நன்றாக இருக்கிறது என்று ஆணித்தரமாக அவர் பேசி வருகிறார். வெளிநாடுகளில் எல்லாம் இந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டினார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

இப்படி ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கும் கங்குவா திரைப்படம், தங்களுக்கு மெகா பிளாக்பஸ்டர் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கூறி வருகிறது. வெறும் இரண்டு நாட்களில் 89 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு தான் போயிருக்கிறார்கள். அப்படி என்றால் விரைவில் 100 கோடியை அந்த படம் எட்டி விடும் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளரின் ஆயிரம் கோடி ரூபாய் கனவுதான் என்ன ஆனது தான் இங்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்