- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு வெடிய.. காந்தாரா 1 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செஞ்ச சாதனையை பாருங்க.. யப்பா வெறித்தனம்

போடு வெடிய.. காந்தாரா 1 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செஞ்ச சாதனையை பாருங்க.. யப்பா வெறித்தனம்

- Advertisement -

கன்னட சினிமா பெரும்பாலும் இந்திய அளவில் தெரியாமலேயே இருந்தது. அதனை மாற்றிக்காட்டிய படங்களில் ஒன்று என்றால் அது காந்தாரா. ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய அந்தப் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கடந்த வருடம் படம் ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், நாட்டு தெய்வங்களை பற்றியும் படம் பேசியிருந்தது.

இந்திய அளவில் அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்வரை படத்தை பாராட்டினார்கள். மேலும் படம் முடிகையில் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுக்கப்பட்டது. அதேசமயம் இனி எடுக்கப்போவதுதான் காந்தாராவின் முதல் பாகம் என்று ரிஷப் ஷெட்டி அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.

- Advertisement -

இந்த சூழலில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் படத்துக்கு காந்தாரா அத்தியாயம் 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது முதலில் வெளியான காந்தாரா படத்தின் முந்தைய காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேசுவது போல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது பஞ்சுருளியின் காலம் மற்றும் சிவாவின் முந்தைய தலைமுறை குறித்து படம் பேசலாம் என்றே கருதப்பட்டது.

அது நேற்று வெளியான காந்தாரா ஏ லெஜண்ட் அத்தியாயம் 1 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ மூலம் உறுதியாகியிருக்கிறது. நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தில் இந்த டீசரில் தோன்றுகிறார். இதன் மூலம் மீண்டும் நம்மை காந்தாரா உலகிற்குள் கொண்டு செல்கிறார். முதல் பாகத்தில் எதிரொலித்த கர்ஜனை இதிலும் எதிரொலிக்கிறது.

- Advertisement -

இந்த டீசரில் ரிஷப் ஷெட்டி ஏற்றிருக்கும் கதாபாத்திரன் சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசரானது மொத்தம் ஏழு மொழிகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காந்தாரா ஏ லெஜண்ட் அத்தியாயம் 1 டைட்டில் டீசர் யூட்யூபில் பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

அதாவது டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் இதுவரை 14 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இது பெரும் சாதனையாகும். இதனால் படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த பார்வைகள் அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உறுதி செய்திருக்கிறது.

முன்னதாக காந்தாரா படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. எனவே இந்தப் படம் அந்த சாதனையை உடைக்கும் என காந்தாரா ரசிகர்கள் நம்புகின்றனர். காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்படவிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்