- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 வாரங்களில் ரூ. 30 கோடி வசூலைக் கடந்த மெய்யழகன் படம், மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர்...

3 வாரங்களில் ரூ. 30 கோடி வசூலைக் கடந்த மெய்யழகன் படம், மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு – கைதி 2, சர்தார் 2 பட வரிசையில் இதுவும் சேரப் போகுதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களை கடந்து நடிகர் கார்த்தி தனக்கான ஒரு சிறப்பான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கார்த்தி ஜாலியான படங்களில் நடித்தாலும் ஆக்சன் படங்களில் நடித்தாலும் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் கார்த்தியின் 25 வது படம் ஜப்பான் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூமுருகன் தான் ஜப்பான் படத்தை இயக்கினார். எனினும் அந்த படம் மிகப்பெரிய பிளாப் படமாக கார்த்திக்கு அமைந்தது. இந்தியன் 2 படத்துக்கு முன்பே ரசிகர்களை கதறவிட்ட சில படங்கள் வரிசையில் ஜப்பான் படமும் இணைந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்த 27வது படம் மெய்யழகன், கடந்த மாதம் 20ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான இந்த படம், வித்யாசமான கதைக்களத்தில் இருந்தது.

கடந்த மாதம் 20ம் தேதி வெளிவந்த மெய்யழகன் படம் 3வது வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆன போதும், 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மெய்யழகன் படமே தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இந்த படத்துக்கு ரசிகர்களின் வருகை இன்னும் அபரிதமாக உள்ளது. அதே போல் லப்பர் பந்து படமும் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் வேட்டையன் படம் வெளியாகி 3வது வாரத்தில் தற்போது 30 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மெய்யழகன் படத்துக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதைத்தொடர்ந்து மெய்யழகன் படத்தை இயக்கிய 96 பட இயக்குனர் பிரேம்குமாருடன் மீண்டும் கைகோர்த்து புதிய படம் ஒன்றில் நடிக்க நடிகர் கார்த்தி முடிவு செய்து இருக்கிறார்.

தற்போது சர்தார் 2 படப்பிடிப்பில் உள்ள நடிகர் கார்த்தி, அதைத் தொடர்ந்து கைதி 2 படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி, அதன்பிறகு மீண்டும் மெய்யழகன் பட இயக்குனர் பிரேம் குமாருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஆனால் அந்த படம் மெய்யழகன் படத்தின் 2ம் பாகமாக இருக்குமா, அல்லது வேறு புதிய படமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துளளது. ஆனால் மீண்டும் மெய்யழகன் வெற்றிப் படக் கூட்டணி இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்