- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... சூது கவ்வும் இயக்குனருக்கு அடுத்த...

கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… சூது கவ்வும் இயக்குனருக்கு அடுத்த சூப்பர் படம் ரெடி…

- Advertisement -

மெய்யழகன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக, சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார். அது ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் லாபம் கொடுத்தது. இதன் காரணமாகவே அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து இருக்கிறார்கள். இதில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார்.

தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளிப் போகிறது. ஆனால், இதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது எப்படி இருக்க கார்த்தி அடுத்ததாக மார்ஷல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டானாக்காரன் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த தமிழ் இதனை இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் கதைப்படி 1960களில் நடக்கும் காலகட்டம் என்பதால், அதற்கான ஷெட் போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் பாணியில் தமிழ் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாகவும் பேசுகிறார்கள்.

மார்ஷல் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அதன் இயக்குனரான நலன் குமாரசாமிதான். சூது கவ்வும் திரைப்படம்தான் அவரின் முதல் காவியம்.

- Advertisement -

எந்த ஒரு எதிர்பார்ப்பும் பரபரப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து, கதைக்களத்தையும் மிகப் புதியதாக கொடுத்து அசத்தியிருந்தார் நலன் குமாரசாமி. அடுத்ததாக அவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில்தான் அவரது மூன்றாவது திரைப்படமான வா வாத்தியார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மசாலா படமாக எடுக்கப்பட்டிருக்கும் இதில் எம்ஜிஆர் ரசிகராக வருகிறார் கார்த்தி. கீர்த்தி ஸெட்டி கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்