சினிமா துறையில் பந்தா காட்டாதவர்கள் நடிகர், நடிகையர் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த காலத்தில் இருந்தே இந்த காலம் வரை, சினிமாவில் ஒரு காட்சியில் நடித்துவிட்டாலே, நான் யார் தெரியுமா என சட்டை காலரை தூக்கி விடாத குறையாக தான் பலரும் நடந்துக் கொள்கின்றனர்.
ஆனால் மீடியா முன்பு, மிகவும் சாதாரண நடிகர்களாக தங்களை காட்டிக் கொள்வார்கள். அவர்களை பார்க்க வரும் ரசிகர்களின் முன்னிலையிலும், திரைப்படத்துறை சார்ந்தவர்களிலும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவர்கள் செய்யும் ஓவர் அலட்டலை பார்த்தால், நிச்சயம் அந்த நடிகர், நடிகையர் மீதுள்ள நல்ல அபிமானமே ரசிகர்களுக்கு மாறிப் போகும்.
ஆனால் ஒரு சிலர் நடிகர்கள் மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் என எந்த இடத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரியாக தான் நடந்துக்கொள்வார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம், அவர்களது தலையில் நான் ஒரு சினிமா நடிகர், பெரிய ஹீரோ என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் போய்விடுவதுதான்.
அந்த வகையில் சினிமா இமேஜ் வட்டத்துக்குள் சிக்கி, கெத்து காட்டாமல் நிஜத்தில் சிறந்த மனிதர்களாக இருந்தவர்கள் பட்டியலில் முதலிடம் எம்ஜிஆருக்கு தான். அடுத்து நடிகர் விஜயகாந்த். ரசிகர்களிடம் பாகுபாடு காட்டாதவர் நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, அதே வரிசையில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சையும் தாராளமாக சொல்லலாம். ரஜினி, கமல் எல்லாம் மேடையில் யதார்த்தமாக பேசுவதாக காட்டிக்கொண்டாலும், நேரில் பார்க்கச் செல்லும் ரசிகர்களை, அருகில் கூட நெருங்க விடமாட்டார்கள். இதுதான் உண்மை.
நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் இப்போது புல்லட் என்ற ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் அவரது ஓவர் அலப்பரை படக்குழுவினரை டென்சனாக்கி வருகின்றனர். அதை செய், இதை செய், அப்படி மாத்து, இப்படி மாத்து என ஏகப்பட்ட குளறுபடி செய்து ஷூட்டிங்கில் இருப்பவர்களை டார்ச்சர் செய்கிறார். இந்த படத்தை டைரக்ட் செய்யும் இன்னாசி பாண்டியனும், தயாரிப்பாளரும் கதிரேசனை, இவரை ஏன் ஹீரோவாக நடிக்க அழைத்தோம் என புலம்பி தீர்க்கின்றனர்.
மேலும் இந்த படத்தில், கேமியோ ரோலில் நடிப்பதாக ஏற்கனவே மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஒத்துக்கொண்ட நிலையில், அவரும் இன்னும் நடித்துக் கொடுக்கவில்லை. படமும் முக்கால்வாசி வளர்ந்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல், தயாரிப்பாளரும், டைரக்டரும் அப்செட்டில் இருக்கின்றனர். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது தம்பிக்கு புத்திமதி சொல்லி கொஞ்சம் திருத்தினால் நன்றாக இருக்கும் என்பதே படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறிமுகமாகும் முதல் படத்திலேயே இப்படியா, என்றுதான் அவரது அடாவடியை பார்த்து பலரும் டென்சன் ஆகின்றனர்.





