அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடுவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சற்று தொய்வடைந்த நிலையில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் ஆக்சன் காட்சிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திரைப்படத்தில் இளம் மலையாள நடிகர்கள் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தனக்கு கைவந்த கலையான க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியாகத்தான் இந்த திரைப்படத்தை, மகிழ் திருமேனி எடுத்து வருகிறார். இதில் த்ரிஷா, அஜித்திற்கு மனைவியாக நடிப்பதும் இங்கு பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அனேகமாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க குட் பேட் அக்லி திரைப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் தனது சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் நடித்து முடித்து இருக்கிறார் அஜித் குமார்.
ஹைதராபாத்தில் இதற்கான பணிகளை செய்தார் படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத அஜித்தை ரசிகர்கள் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றது போலவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அமைந்தன. நடு விரலை, காட்டி பலரையும் ஆச்சரியப்படுத்தினார் அஜித்குமார். அதிலிருந்தே கதையுடன் அவர் ஒன்றி போய்விட்டது தெரிவதாக சினிமா விமர்சகர்கள் கூறினர்.
அதுமட்டுமல்லாமல் கலர் கலராக கண்ணாடி, கலர் கலர் சட்டை என அஜித் ஒரு வித்தியாசமான லுக்கில் தான் காட்சியளிக்கிறார். படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடவே இல்லை.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்காக இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த், அந்தப் படம் குறித்த சில தகவல்களை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது கூறி இருக்கிறார். அதாவது அஜித்திற்கான ஓப்பனிங் பாடல் அட்டகாசமாக வந்திருப்பதாகவும், இதற்கான சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் அதில் மாஸாக நடனமாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியிருக்கிறார். இதைக் கேட்கும்போதே உற்சாகம் ஊற்றெடுக்கிறதே என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





