தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் படங்கள் சில 300 கோடி முதல் 600 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருக்கின்றன. ஆனால் நடிகர் சூர்யா நடித்த படங்களில் சிங்கம் 2 படம் மட்டுமே அதிகபட்சமாக ரூ. 160 கோடி வசூலை கடந்திருந்தது.
கடந்தாண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படம் மொத்த வசூல் ரூ. 235 கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால் அது தியேட்டரிக்கல் வசூல் மட்டுமே அல்ல. ஓடிடி சாட்டிலைட் உரிமங்கள் ஆடியோ ரைட்ஸ் ஆகிய அனைத்தும் இணைந்த மொத்த வசூலாகவே இருந்தது.
எனவே இந்த முறை கருப்பு படம் தியேட்டரிக்கல் வசூல் மட்டுமே 300 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. கடந்த 15ம் தேதி வெளியான இந்த படம் 2 வாரங்களில் ரூ. 300 கோடி வசூலை கடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. இன்னும் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
நடிகர் சூர்யாவுக்கு 2013ம் ஆண்டுக்கு பிறகு 13 ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்களே இல்லை. நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்களும் வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. ஆனால் தியேட்டரில் வெளியான சூர்யாவின் 10 படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன. அதிலும் கங்குவா படம் மிக மோசமாக தோல்வியடைந்தது.
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நடிகர் சூர்யாவுக்கு தந்திருக்கிறது. பக்தி திரைக்களத்தில் கருப்பசாமியை மையப்படுத்திய இந்த கதை ரசிகர்களுக்கு பெரிய திருப்தியை தந்திருக்கிறது. நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது.
இதையடுத்து லக்கி பாஸ்கர் வாத்தி சங்கராந்தி வஸ்துனம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா மமிதா பைஜூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. கருப்பு படம் போல இந்த படமும் ரூ. 300 கோடி வசூலை அள்ளுமா என்ற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





