- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 நாட்களில் கருப்பு படத்தின் ஒட்டுமொத்த வசூல் நிலவரம் - பட்டைய கிளப்பும் நடிகர் சூர்யா,...

12 நாட்களில் கருப்பு படத்தின் ஒட்டுமொத்த வசூல் நிலவரம் – பட்டைய கிளப்பும் நடிகர் சூர்யா, விரைவில் அந்த சாதனை செய்வது உறுதி!

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் சூப்பர் கம்பேக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக பிளாப் படங்களை தந்து வந்த நடிகர் சூர்யா, கருப்பு படத்தின் மூலமாக மீண்டும் மாஸ் ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார். கருப்பு படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படம் கடந்த 15ம் தேதி ரிலீஸானது. 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஒரு நாள் தாமதமாக வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஷிவதா சுவாசிகா மலையாள நடிகர் இந்திரன்ஸ் நட்டி நடராஜ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

கருப்பசாமியை மையப்படுத்தி பக்தி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் சூர்யா கடவுளாக இருந்துக்கொண்டு வக்கீலாக வந்து கோர்ட்டில் வாதாடுகிறார். அவரை எதிர்க்கும் வக்கீல் கேரக்டரில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வித்யாசமான கதைக்களம் இது.

கருப்பு படம் வெளியான 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. உலகம் முழுவதும் இந்த படம் 207 கோடி ரூபாய் வசூலை எட்டியதாக அப்போதே படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடித்த படங்களில் அதுவரை சிங்கம் 2 படம்தான் ரூ. 160 கோடி வசூலித்த முதல் படமாக இருந்தது.

இப்போது கருப்பு படம் அந்த சாதனையை முறியடித்து 207 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டது. இந்நிலையில் தற்போது கருப்பு படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் மொத்த வசூல் ரூ. 275 கோடி என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் ரூ. 300 கோடியை கருப்பு படம் வசூலில் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்