- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடக்கடவுளே மீண்டும் முதல்ல இருந்தா... ஆட்டத்தை மீண்டும் ஆட நினைக்கிறாரா ஆர்.ஜே பாலாஜி... தவிப்பில் சூர்யாவின்...

அடக்கடவுளே மீண்டும் முதல்ல இருந்தா… ஆட்டத்தை மீண்டும் ஆட நினைக்கிறாரா ஆர்.ஜே பாலாஜி… தவிப்பில் சூர்யாவின் கருப்பு படம்…

- Advertisement -

சூர்யா கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியான திரைப்படம் ரெட்ரோ. காதல் மற்றும் ஆக்சன் கதை களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் அந்த திரைப்படம் ஓரளவு வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திற்காக ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்தார் சூர்யா.

இந்த கூட்டணி பலருக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தி விட்டது. ஆர்.ஜே பாலாஜி ஏற்கனவே நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தாலும், சூர்யா போன்ற பெரிய இயக்குனருடன் கைகோர்த்து இருப்பதால் அந்த ஆவல் அதிகரித்தது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

- Advertisement -

தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் பட பூஜையை நடத்தினார்கள். அப்போதே இது ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது. திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்னும் திரைப்படத்தை எடுக்க, ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டதாகவும் தற்போது அதுதான் வேறு ஒரு வடிவத்தில் சூர்யாவை வைத்து எடுக்கப்படுவதாகவும் அப்போது பேசினார்கள்.

இதில் சூர்யாவுடன் திரிஷா, லப்பர் பந்து சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சாய் அபயங்கர் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அண்மையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு திரைப்படத்திலிருந்து முதல் வீடியோ வெளியானது. அதில் ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தெரிந்தது. ரசிகர்களுக்கு ஓரளவு பிடிக்கும் வகையிலேயே அந்த வீடியோ அமைந்தது.

- Advertisement -

இப்படி இருக்க, படத்தை சரஸ்வதி பூஜை அல்லது தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்த சூழலில், இரண்டுமே தற்போதைக்கு நடக்காது என்று கூறப்படுகிறது. படத்தின் காட்சிகளை கோர்வையாக பார்த்த ஆர் ஜே பாலாஜிக்கு அதில் திருப்தி ஏற்படவில்லையாம். இதனால் 10 முதல் 20 நாட்கள் வரை மீண்டும் ரீசூட்டிங் நடத்த வேண்டும் என்று அவர் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து விட்டதாக பேசப்படுகிறது. இருக்கும் காட்சிகளை வைத்து சிறப்பாக எடுத்துக் கொடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சொன்னதாக சினிமா துறையில் உள்ள சிலர் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ஆர்ஜே பாலாஜி தரப்புக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே முரண்பாடு இருந்து வந்ததாகவும் பேசப்படுகிறது. இருப்பினும் தற்போது ஆர் ஜே பாலாஜி மீண்டும் ரீ-சூட் நடத்த வேண்டும் என்று கூறி இருப்பதாக வெளிவரும் தகவல் மூலம் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப் போகலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்