- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 30ம் தேதி வெளியாகும் கருப்பு பல்சர் படம்… முதன்முறையாக அட்டக்கத்தி தினேஷ் இப்படி ஒரு...

வரும் 30ம் தேதி வெளியாகும் கருப்பு பல்சர் படம்… முதன்முறையாக அட்டக்கத்தி தினேஷ் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா?

- Advertisement -

அறிமுக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான முதல் படம் அட்டக்கத்தி. இந்த படத்தின் நடிகர் தினேஷ் அறிமுகமாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார். அன்று முதல் அட்டக்கத்தி தினேஷ் என்றே அழைக்கப்பட்டார். மேலும் இந்த படத்தில் கலையரசன் ஐஸ்வர்யா ராஜேஷ் நந்திதா உள்ளிட்டோரும் அறிமுகமாகினர்.

அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து ஒரு நாள் கூத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் குக்கூ விசாரணை லப்பர் பந்து திருடன் போலீஸ் கபாலி என பல படங்களில் தினேஷ் தொடர்ந்து நடித்தார். லப்பர் பந்து படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவர் கெத்து தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இப்போது தினேஷ் நடித்த கருப்பு பல்சர் படம் வருகிற 30ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் இருந்து நடிகர் தினேஷ் அட்டக்கத்தி தினேஷூம் அல்ல கெத்து தினேஷூம் அல்ல. அவரை பெயரை மாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

கருப்பு பல்சர் படத்தின் கதை ஒரு பைக்கை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி உள்ளது. ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் போல இருக்காது என்றும் இது வேறுமாதிரியான ஒரு திகில் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. முதன் முறையாக இந்த படங்களில் தினேஷ் 2 வேடங்களில் நடிப்பதும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் முரளி கிரிஷ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்பு நிற பல்சர் பைக்கை வாங்கும் தினேஷ் ஒரு கட்டத்தில் பல அமானுஷ்யமாக விஷயங்களை சந்திப்பதாகவும் அதில் ஏற்படும் பிரச்னைகள் திகில் நிறைந்த காட்சிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு திரைக்கலைஞனாக தனது அழுத்தமான நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் நடிகர் தினேஷ் பெயர் பெற்றவர். குக்கூ விசாரணை லப்பர் பந்து என பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை அசத்தியிருக்கிறது. அந்த வகையில் கருப்பு பல்சர் படமும் பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 30ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்