- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஸ் நடிப்பில் தெறிக்க விட்ட தளபதி, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் கடைசி 40 நிமிடங்கள்...

மாஸ் நடிப்பில் தெறிக்க விட்ட தளபதி, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் கடைசி 40 நிமிடங்கள் வேற லெவல் – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த சில வாரங்களாக தி கோட் படத்தின் வைப் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் இருந்த நிலையில், அடுத்தடுத்து விஜய் படத்தில் இருந்து வெளியான பாடல்கள், குறிப்பாக கடந்த மாதம் 17ம் தேதி மாலை வெளியான தி கோட் டிரெய்லர்கள் ரசிகர்களை பெரிய அளவில் உசுப்பேற்றி விட்டது. இன்று விஜய் படம் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கிறார். ஸ்குவார்டு ஒன்றில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் ஒரு டீமாக பணி செய்கின்றனர். அவர்களுக்கு தலைமை பொறுப்பில் ஜெயராம் இருக்கிறார். ஒரு ஆபரேஷனில் மைக் மோகன் குடும்பத்தை இவர்கள் இழக்கச் செய்கின்றனர். அதன்பிறகு மோகன், நடிகர் விஜய் குடும்பத்தை பழிவாங்குவதும் அதில் இருந்து விஜய் ஜெயிப்பாரா என்பதுதான் கதை.

- Advertisement -

இதில் மாஸ் காட்டி நடித்திருப்பது தளபதி விஜய், இளைய தளபதி விஜய்தான். அத்துடன் படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே நல்ல கேரக்டர்களும், நடிப்பதற்கான வாய்ப்புகளும் நிறைய கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏமாற்றம் தருவது மீனாட்சி செளத்ரிதான். வழக்கமாக ஒரு மாடர்ன் நாயகியாக வந்து செல்கிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்தது போல கேப்டன் விஜயகாந்த் மாஸ் இன்ட்ரோ பெரிய அளவில் ரசிகர்களை குதூகலமடைய செய்திருக்கிறது. அதே போல் சிவகார்த்திகேயன், திரிஷா போன்றவர்களின் கேமியோ ரோலும் ரசிகர்களை உற்சாக கூச்சலிட வைத்து, படத்தை இன்னும் வேற லெவலாக மாற்றியிருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தை பொறுத்தவரை டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் வெங்கட்பிரபு புதிய சாதனை செய்திருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். நடிப்பிலும், ரொமான்ஸிலும் விஜய் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். விஜயை பொருத்த வரை நடிப்பில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

முதல் பாதி படத்தில் சற்று தொய்வாக இருந்தாலும் பின்பாதியும் குறிப்பாக இடைவேளை காட்சியும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து விட்டன. படத்தின் கடைசி 40 நிமிடங்களில் ஏகப்பட்ட விறுவிறுப்பான காட்சிகளை தந்து வெங்கட்பிரபு மாஸ் காட்டியிருக்கிறார். விஜய் ரசிகர்களை பொருத்த வரை தீபாவளி பண்டிகை வரும் முன்பே, தி கோட் 10 ஆயிரம் சரவெடியாக வெடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்