- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவை எல்லாம் ஏத்துக்க முடியாது- சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய் லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சையை...

நயன்தாராவை எல்லாம் ஏத்துக்க முடியாது- சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய் லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி

- Advertisement -

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இன்று “ஜெயிலர்” திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “தலைவர் நிரந்தரம்” என்ற சொல் ஹேஷ்டேக் போல் பரவி வருகிறது. ரஜினிதான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றி சொல்லாமல் சொல்லியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் பிரபல நடிகையான கஸ்தூரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சூப்பர் ஸ்டாரு யார்ன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும், ரஜினியை தவிர சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு வேறு யாரும் பொருந்தமாட்டார்கள். ரஜினிக்கு முன்பு பி.யு.சின்னப்பா-தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்-சிவாஜி போன்ற பலரும் இருந்தனர். தற்போது ரஜினி-கமல் இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கு விஜய்-அஜித் ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி வந்துக்கொண்டே இருப்பார்கள். இளையராஜாவிற்கு முன்பும் பின்பும் பல பேர் வரலாம். ஆனால் ராகதேவன் என்றால் இளையராஜாதான். அது போல்தான் இதுவும். இதற்கு டிஸ்கஷனே தேவையில்லை. தளபதி விஜய்யிடம் கேட்டீர்கள் என்றால் அவரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று சொல்லுவார்” என்று கூறினார்.

மேலும் நிருபர், “பெண் நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார்?” என்று கேட்டபோது, “ஓரு முன்னணி நடிக/நடிகைக்காகவே ஓப்பனிங் இருக்கவேண்டும், இவங்க நடிச்சிருக்காங்க, அதனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என படைத்திரண்டு போனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். அந்த வகையில் தற்சமயத்தில் எந்த நடிகையும் இல்லை.

முன்னொரு காலகட்டத்தில் கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அவர்தான் முதல் லேடி சூப்பர் ஸ்டார். அதன் பின் விஜயசாந்தியை கூறலாம். ஆனால் இப்போது அது போல் யாரையும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

அப்போது நிருபர், “நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாமே” என்று கூறினார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, “நானும் நயன்தாரா ரசிகைதான். ஆனால் நயன்தாராவுக்காவோ அல்லது நயன்தாராவை மையமாக வைத்தோ ஒரு திரைப்படம் ஹிட் அடித்தது என்றால் அது மாயா திரைப்படம் மட்டும்தான். ஆனால் மற்ற திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆதலால் அவரை நாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

சற்று முன்