நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவர் நடித்த துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியவர் கஸ்தூரி ராஜா என்று சொன்னாலும் அந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை திரைக்கதை வசனம் எல்லாம் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவனுக்கு சொந்தமானது என்று பலரும் கூறுகின்றனர்.
அதன்பிறகு நடிகர் தனுஷ் சோனியா அகர்வால் நடிப்பில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். மாபெரும் வெற்றியை இந்த படம் பெற்றது. தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி படம் செல்வராகவனுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை நானே வருவேன் போன்ற படங்களில் தனுஷ் நடித்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆடுகளம் விசாரணை அசுரன் போன்ற படங்களில் நடித்து தனுஷ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இப்போது இயக்குனராகவும் தனுஷ் 3 படங்களை தந்துவிட்டார்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் 21ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. இதில் தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை தனுஷ் நாயகனாக அறிமுகப்படுத்தி இருந்தார். இதில் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்திருந்தார். இளம் புதுமுகங்கள் நிறைய பேர் அறிமுகமான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
நீக் என சுருக்கமாக அழைக்கப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை ரூ. 13 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் இயக்கிய நிலையில், இந்த படம் ரூ.8 கோடிதான் வசூலித்தது. எதிர்பார்த்த அளவுக்கு நீக் படம் வெற்றி பெறாத நிலையில் பவிஷ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். கிடாரி பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசுகையில், என பேரன் பவிஷ் படிப்பு போய்விட்டது என்று புலம்பி இருக்கிறார். 12ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த தனது அக்கா மகன் பவிஷை நீக் படத்தில் தனுஷ் நடிக்க வைத்த நிலையில், பவிஷ் படிப்பு போய்விட்டது. பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பவிஷை நடிக்க அழைத்து வந்த தனது மகன் தனுஷ்தான் காரணம் என்ற ரீதியில் இயக்குனர் கஸ்தூரி ராஜா புலம்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





