- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா ரசிகர்களுக்கு நடிகர் சூரி சொன்ன அட்வைஸ் - சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் ஒருமுறை...

சினிமா ரசிகர்களுக்கு நடிகர் சூரி சொன்ன அட்வைஸ் – சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் ஒருமுறை கூட இப்படி சொன்னதில்லையே?

- Advertisement -

காமெடி நடிகராக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான நடிகர் சூரி இன்று ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்த சூரி அடுத்து விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து இப்போது மாமன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்த படம் நேற்று முன்தினம் 16ம் தேதி ரிலீஸான நிலையில் முதல் நாளில் 2.9 கோடி ரூபாய் வசூலை கடந்தது. 2ம் நாளான நேற்று ரூ. 5 கோடி வசூலை கடந்திருக்கிறது. மாமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் நடிகர் சூரி திருப்பூர் கோவை உள்ளிட்ட பல நகரங்களுக்கு நேரில் சென்று தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

மாமன் படம் வெளியான அன்று, படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என மதுரையை சேர்ந்த சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையறிந்த சூரி இது மிகவும் முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால் ஓடும். மண் சோறு சாப்பிட்டால் ஓடாது. நீங்கள் என் தம்பிகளா, ரசிகர்களாக இருக்க கூட தகுதியில்லை என்று பகிரங்கமாக பேசியிருந்தார்.

வழக்கமான ரசிகர்கள் சிலர் செய்யும் கோமாளித்தனமான சில செயல்களை நடிகர்கள் கண்டிப்பதோ எச்சரிப்பதோ இல்லை. ஆனால் நடிகர் சூரி பகிரங்கமாக ரசிகர்களை எச்சரித்தது பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றிருக்கிறது. கவிஞர் வைரமுத்துவே சூரியை இதற்காக பலே பாண்டியா என பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூரி ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரொம்ப போராடி இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் எவ்வளவோ தூரம் இருக்குது போக வேண்டியது. அவங்க அவங்க வேலைகளை பாருங்க தம்பிகளா. நல்ல படைப்பாக இருந்தால் அந்த படம் ஓடப் போகுது. முட்டாள்தனமாக எதையாவது செய்வதால் படம் ஓடாது.

நல்ல படங்களை கொண்டாடுங்கள். அவ்வளவுதான். நல்ல சினிமாவை பாருங்கள் கொண்டாடுங்கள். அதோடு வைச்சுக்குங்க. அதை விட்டுட்டு அடுத்த கட்டத்துக்கு போயி மத்தவங்க முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் பண்ணாதீங்க. உங்களுக்குன்னு குடும்பம் இருக்கு, வாழ்க்கை இருக்கு. அதுல நிறைய இருக்கு. அதை பாருங்க. இது ஒரு பொழுதுபோக்கு சினிமா. இதுல நல்ல விஷயம் இருந்தால் அதை பாலோ மட்டும் பண்ணுங்க என்று நடிகர் சூரி ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் கூட இப்படி ரசிகர்களுக்கு சொன்னதில்லையே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்