- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு 49 படத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா? தக்லைப் படம் வந்தா தான் அதுக்கு...

சிம்பு 49 படத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா? தக்லைப் படம் வந்தா தான் அதுக்கு ஓகே சொல்வாரா? – ஆனா சிம்பு இப்படி மாறிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். தமிழ் சினிமா இயக்குனர்களில் அஷ்டவதானி என புகழப்படுபவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர். அவரது மகனான சிலம்பரசன் தந்தையைப் போலவே பிள்ளையும் கலைத்துறையில் சிறந்து விளங்கி வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக டி ராஜேந்தர் படங்களில் நடித்து அறிமுகமான சிலம்பரசன், வளர்ந்து வாலிபனான பிறகு காதல் அழிவதில்லை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, தம், குத்து, ஒஸ்தி, விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் சிம்பு நடித்தார்.

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மாநாடு. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களும் சிலம்பரசனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து தக்லைப் என்ற படத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பே முடிவடைந்து நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தக்லைப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிலம்பரசன் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இது சிம்பு நடிக்கும் 49 வது படம் ஆகும். நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்று குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிம்பு 49 படத்தை ஓ மை கடவுளே, டிராகன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரியும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு நடிப்பதும், நான் இயக்குவதும் என இரண்டு விஷயங்கள் மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் தனது எஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சிம்பு 49 படத்தில் நடிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின் நிறுவனம் அவருக்கு என்ன சம்பளம் பேசியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு இந்த படத்தில் நடிக்க இன்னும் சம்பளம் பேசி முடிவு செய்யவில்லை. மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் படம் வெளியான பிறகு, அந்த படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொறுத்து சிம்புவின் சம்பளம் தீர்மானித்துக் கொள்வதாக ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். முதல் முறையாக சம்பளமே பேசாமல், தனது 49வது படத்தின் சிம்பு நடிக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்