- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் என்னிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி - நடிகர்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் என்னிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி – நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லொடுக்கு பாண்டி என்றவுடன் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருபவர் காமெடி நடிகர் கருணாஸ். அவர் அறிமுகமான முதல் படம் நந்தாவில் திருடும் கேரக்டரில் நடித்த அவரது பெயர் அதில் லொடுக்கு பாண்டி. தனக்கு கோர்ட்டில் சிறை தண்டனை கொடுத்த ஜட்ஜ் வீட்டிலேயே அவர் திருடுவது இன்றும் டிரண்டிங் உள்ள ஒரு சூப்பர் காமெடியாகும்.

தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்த கருணாஸ் ஒரு கானா பாடகர். அவரது மனைவி கிரஸேியும் பாடகி தான். சில படங்களை சொந்தமாக தயாரித்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்போது அரசியல் களத்தில் உள்ள கருணாஸ் வருகிற சட்டசபை தேர்தல் திமுக அணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

- Advertisement -

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். நெடுஞ்சாலை படத்தில் ஓட்டலில் வேலை செய்யும் சிறுவனாக நடித்திருந்தார். தொடர்ந்து விடுதலை 2 அசுரன் போன்ற படங்களில் நடித்த அவர் இப்போது யூத் என்ற படத்தை டைரக்ட் செய்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கென் கருணாஸ் கூறியதாவது, இன்னைக்கு நான் டைரக்டராக ஒரு படம் பண்ண காரணம் நடிகர் தனுஷ் தான். அதுதான் உண்மை. படிப்பை முடிச்சிட்டு நம்ம வாழ்க்கையில ஒரு கட்டத்துல என்ன பண்றது என்று தெரியாம முழிச்சிட்டு இருப்போம். நானும் அப்படி தான் முழிச்சிட்டு இருந்தேன்.

- Advertisement -

அசுரன் படம் ஷூட்டிங் அப்போ நடிகர் தனுஷ் கூட நடிச்சேன். அப்போது அவர்கிட்ட பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்கிட்ட மேற்கொண்டு என்ன பண்ண போறேன்னு தனுஷ் கேட்டார். சும்மா தான் இருக்கேன். என்ன பண்றதுன்னு தெரியலன்னு மனதில் இருப்பதை அப்படியே சொன்னேன்.

அதற்கு தனுஷ் சார், உங்கிட்ட திறமை இருக்கு. அசிஸ்டன்ட் டைரக்டரா ஜாயின்ட் பண்ணி ஒர்க் பண்ணு என்று சொன்னார். அவர் அன்னைக்கு சொன்ன வார்த்தை இன்னைக்கு நான் டைரக்டராக ஒரு படம் எடுத்து இருக்கேன். நான் அவருக்கு எப்போதுமே நன்றியோடு இருப்பேன் என்று கென் கருணாஸ் கூறியிருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்களில் கென் கருணாஸ் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்