- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சினிமாவில் 50 ஆண்டுகளை வெற்றிக்கரமாக கடந்த நடிகர் மம்முட்டி - அவரை வேற லெவலில்...

மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளை வெற்றிக்கரமாக கடந்த நடிகர் மம்முட்டி – அவரை வேற லெவலில் கௌரவப்படுத்திய கேரளம் மாநில அரசு!

- Advertisement -

மலையாள சினிமாவில் கேரள ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் மம்முட்டி. 70 வயது கடந்த நிலையில் இன்னும் நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்தாண்டில் பிரம்மயுகம் என்ற படத்தில் மம்முட்டியின் நடிப்பு வேற லெவலில் ரசிகர்களை மிரட்டியிருந்தது. இன்னும் நடிப்பில் அவர் தனித்துவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பல ஹிட் படங்களில் நடிகர் மம்முட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்துடன் தளபதி படத்தில் மம்முட்டி இணைந்து நடித்திருந்தார். இன்றும் நட்புக்கு இலக்கணமாக தமிழ் சினிமாவில் தளபதி படம்தான் உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியும் மம்முட்டியும் வேற லெவலில் நடித்திருந்தனர்.

கிளிப்பேச்சு கேட்கவா மௌனம் சம்மதம் ஆனந்தம் எதிரும் புதிரும் புதையல் வந்தே மாதரம் கார்மேகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அரசியல் அழகன் ஜூனியர் சீனியர் என பல படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். இப்போது நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மானும் மலையாளம் தமிழ் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளாக முன்னணி நடிகராக பல நல்ல படங்களில் நடித்து வரும் திறமையான கலைஞராக விளங்கும் நடிகர் மம்முட்டியை கேரளம் அரசு கௌரவப்படுத்தி இருக்கிறது. கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பிஏ வரலாறு பாடப்பிரிவில் ஹிஸ்டரி ஆப் மலையாளம் சினிமா என் பாடம் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடத்தில் நடிகர் மம்முட்டியின் சினிமா வாழ்க்கை அவர் நடித்த படங்கள் சிறந்த நடிப்புக்காக அவர் வாங்கிய விருதுகள் என பல விஷயங்களை அந்த பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவின் அடையாளமாக இருப்பவர் நடிகர் மம்முட்டி என்றும் அந்த பாடத்திட்டத்தில் அவரை முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு இந்தியை போல மலையாளத்தில் சினிமா கலைஞர்களை கொண்டாடும் வழக்கம் மாநில அரசுக்கும் கிடையாது; ரசிகர்களுக்கும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் ரசிப்பார்கள். பாராட்டுவார்கள். ஆனால் தெய்வமாக அந்த நடிகரை கொண்டாட மாட்டார்கள். அரசியலுக்கு வந்தால் ஓட்டுப் போட மாட்டார்கள். அந்த சூழலில், கேரளம் அரசு கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் நடிகர் மம்முட்டியை கொண்டு வந்து அவரை கௌரவப்படுத்தி இருப்பது மலையாள சினிமா ரசிகர்களிடம் பெரிய அளவில் ஆச்சரியத்தை தந்துள்ளது.

சற்று முன்