நடிகர் விஜய் இதுவரை 69 படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த 69வது படம் ஜனநாயகன் இன்னும் திரைக்கு வரவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பிறகு மே மாதம் 2வது வாரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அந்த படம் ரூ. 500 கோடி பட்ஜெட் வசூலை குவிக்குமா, பலத்த நஷ்டத்தை சந்திக்குமா என்பதும் புதிராக இருந்து வருகிறது.
நடிகர் விஜய் நடித்த படங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் கில்லி. இயக்குனர் தரணி டைரக்ட் செய்த இந்த படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருப்பார். மதுரைக்கு கபடி விளையாட செல்லும் விஜய், அங்கு பிரகாஷ் ராஜிடம் இருந்து திரிஷாவை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருவதுதான் படத்தின் மையக் கதை.
இந்த படம் விஜய்க்கும் திரிஷாவுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரியை இந்த படம் உருவாக்கியது. அதன்பிறகுதான் குருவி ஆதி போன்ற படங்களில் திரிஷா விஜய் ஜோடி இணைந்தது. கடைசியாக லியோ படத்திலும் திரிஷா விஜயுடன் ஜோடி சேர்ந்திருந்தார். தி கோட் படத்திலும் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
ஆனால் கில்லி படத்தில் விஜய் திரிஷா நடித்தது குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தைப் பார்த்த இயக்குனர் தரணி அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். அப்போது கதாநாயகனாக நடிகர் விக்ரம் கதாநாயகியாக ஜோதிகாவை வைத்து ஒக்கடு படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டார்.
ஆனால் விக்ரம் – ஜோதிகா இருவரும் மற்ற படங்களில் அப்போது பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பின்பே நடிகர் விஜய் நடிகை திரிஷா நடிப்பில் கில்லி படம் உருவானது. அந்த நேரத்தில் இந்த மாற்றத்தை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. கில்லி படம் விஜய் சினிமா கேரியரில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
அதே நேரத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் ஒரு நெருக்கமான நட்பு இந்த படத்தின் மூலம் தான் உருவானது. அதுதான் இப்போது நடிகர் விஜய்க்கு அரசியல் வாழ்க்கையில் பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. ஒருவேளை கில்லி படத்தில் தனலட்சுமி கேரக்டரில் திரிஷா நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தாலோ அல்லது தரணி விரும்பியபடி விக்ரம் ஜோதிகா நடித்திருந்தாலே இப்போது திரிஷா விஜய் விவகாரமே வந்திருக்காது என்று விஜய் ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.





