லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் நாகார்ஜூனா மற்றும் சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் சேர்ந்து மொத்தமாக 43 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர்.
மேலும் கூலி படத்தின் ஓவர்சீஸ் விற்பனை குறித்த தகவல்கள் சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படம் 73 கோடி ரூபாய்க்கு விற்றது என்றும், சிலர் 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை இன்னும் யாரும் வாங்கவில்லை.
இதில் ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனமும், ஐங்கரன் பட நிறுவனமும் ஓவர்சீஸ் விலை பேசிக்கொண்டு இருக்கின்றன. இதற்கிடையே கூலி படம் வெளியாகும் ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 என்ற பான் இந்தியா படமும் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆரும் பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷனும் நடித்த இந்த படம்தான் ஓவர்சீஸ்சில் முன்னணியில் இருக்கிறது.
ஏனென்றால் ஓவர்சீஸ்சில் எப்போதுமே இந்தி படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படும். அதனால் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 படம் வெளியாவதால், ஓவர்சீஸில் ரஜினி நடித்த கூலி படத்துக்கு பெரிய விலை இதுவரை கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் ஒரு தரப்பினர் கூலி படத்துக்கு ஓவர்சிஸில் பெரிய வரவேற்பு இருப்பது போல் பில்டப் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கூலி படத்தை விட நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஓவர்சீஸ்சில் பெரிய பிசினஸ் செய்திருக்கிறது. ஓவர்சீஸ் விற்பனையில் ஜனநாயகன் படம் பெரிய பெஞ்ச் மார்க்கை கிரியேட் செய்திருக்கிறது. ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 80 கோடி ரூபாய்க்கு ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து மலேசியா தயாரிப்பு நிறுவனம், மலேசியா தியேட்டர்களில் ஜனநாயகன் படத்தை வெளியிடும் உரிமைக்காக 12 கோடி ரூபாய் விலை கொடுத்து ஜனநாயகன் படத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மலேசியாவில் எந்த ஒரு தமிழ் படத்தையும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓவர்சீஸ்சில் கூலி படத்தை பின்னுக்கு தள்ளி ஜனநாயகன் படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.





