நடிகை குஷ்பு, அரசியல்வாதியாகவும் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி இருந்த போது முதலில் குஷ்பு இணைந்தது திமுகவில்தான். அங்கு கனிமொழியை விட இவர் டாமினேட் அதிகமாக இருந்ததால் திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து குஷ்புவே திமுகவை விட்டு விலகிவிட்டார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவனை புகழ்ந்துக்கொண்டு, அரசியலில் ஈடுபட்டார். அப்போதும் பெரிய அளவில் காங்கிரஸ்சில் இவரது செல்வாக்கு உயரவில்லை. கட்சியிலும் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், அங்கிருந்தும் சில ஆண்டுகளில் வெளியேறி விட்டார்.
இப்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் குஷ்பு இருக்கிற சூழலில் அவர் முன்னால் சில காலம் இருந்த திமுக, காங்கிரஸ் கட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். குஷ்பு என்றால், தைரியம் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
மன்சூர் அலிகான், திரிஷாவை பேசிய விவகாரத்தில் மிகவும் ஆவேசப்பட்ட குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் சொல்லி, மன்சூர் அலிகான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், மணிப்பூரில் நடந்த கலவர சம்பவத்தில், பெண்கள் அவமதிக்கப்பட்ட போது, குஷ்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என, சமூகவலைதளத்தில் திமுக ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, சேரி மொழியில் பதில் சொல்ல முடியாது என எகத்தாளமாக பதில் அளிக்க, அது வைரலானது. இதையடுத்து, காங்கிரஸ் எஸ்சிஎஸ்டி பிரிவு, குஷ்பு பொது மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் தலைமையில், 36 பேர் போலீசார் குஷ்பு வீட்டின் முன் பாதுகாப்பில் 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்பு சமீபத்திய பதிவில், சேரி என நான் பகடியாக தான் கூறினேன். சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். நான் மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று சொன்னதற்காக மன்னிப்பும் கேட்க முடியாது. அது ஒன்றும் சொல்லக் கூடாத, தகாத வார்த்தை அல்ல. அரசு கோப்புகளில் சேரி என்ற வார்த்தை உள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி போன்றவைதான், என்று பதிவிட்டுள்ளார். பயமே இல்லாத உங்க வீட்டுக்கு
முன்னால எதுக்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு என அந்த பதிவில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.





