- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் என் வண்டி இத்தனை நாள் ஓடியதற்கு காரணமே அதுதான் - நீண்ட ஆண்டுகளுக்கு பின்...

சினிமாவில் என் வண்டி இத்தனை நாள் ஓடியதற்கு காரணமே அதுதான் – நீண்ட ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகை குஷ்பு

- Advertisement -

நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக 1990களில் இருந்தவர். மும்பையை சேர்ந்த குஷ்பு, இந்தியில் சில படங்களில் நடித்த அவர் தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே ரஜினி படம் என்பதும், அதில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்ததும் குஷ்புவுக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.

தொடர்ந்து, டைரக்டர் பாசில் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக வருஷம் 16 என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சில காட்சிகளில் குஷ்புவின் கிளாமர் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தது.கிளாமர் கேர்ள் என்ற பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. எனினும் படத்தின் கதை, திரைக்கதை சிறப்பாக இருந்ததால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

அதன்பிறகு சின்னதம்பி படம், குஷ்புவின் திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படத்தின் நாயகன் பிரபு, டைரக்டர் பி வாசுவுக்கும் இந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. மாலைக்கண் நோயாளியாக கவுண்டமணி காமெடி, இளையராஜாவின் இசையில் பாடல்களும், படத்துக்கு வேற லெவல் வெற்றியை கொடுத்தது.

அதன்பிறகு 10 ஆண்டுகள், தமிழ் சினிமாவில் முடிசூடா ராணியாக குஷ்பு வலம் வந்தார். தொடர்ந்து மன்னன், பாண்டியன், அண்ணாமலை என ரஜினிக்கும், சிங்காரவேலன் படத்தில் கமலுக்கும் ஜோடியாக நடித்தார். பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் என முன்ணனி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் மிக முக்கிய நடிகையாக, முன்னணி வரிசையில் இருந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் டைரக்டர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்த குஷ்பு, அனந்திகா அவந்திகா என்ற மகள்களுக்கு தாயாகவும், இப்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். முதலில் திமுக, பிறகு காங்கிரஸ் இப்போது பாஜகவில் உள்ள குஷ்பு சினிமா, டிவி தயாரிப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற குஷ்பு கூறுகையில், எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம என்றால் அது சின்னதம்பி தான். இன்று வரை சினிமாவில் என் வண்டி ஓடிக்கொண்டு இருக்க சின்னதம்பி தான் காரணம். அந்த படத்தில் நடித்த போது, இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நான் நினைக்கவே இல்லை. அந்த படத்தில் நடிக்க வேறு ஒரு நடிகை கமிட் ஆகி கால்ஷீட் பிரச்னையால் அவர் வராததால் பி வாசு என்னை நடிக்க வைத்தார். அவர் என்னை நன்றாக நடிப்பேன் என்று நம்பி எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார், என்று பேசியிருக்கிறார் நடிகை குஷ்பு

- Advertisement -

சற்று முன்