லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய் திரைப்படம் என்பதையும் தாண்டி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் என்பதாலும் இத்திரைப்படத்திகு ஆவல் அதிகமாகி உள்ளது.

மேலும் “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே சூடு பிடித்துள்ளது. ஒரு பக்கம் “லியோ” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் எனவும் ஆதலால் இது LCUதான் எனவும் கூறுகின்றனர். மறு பக்கம் இத்திரைப்படம் LCU இல்லை என்று கூறுகின்றனர்.
ஒரு வேளை “லியோ” திரைப்படம் LCUக்குள் வந்தால் ரசிகர்களின் உற்சாகத்திற்கு எல்லையே இருக்காது. அந்தளவுக்கு Goosebumps ஆக இருக்கும். ஆதலால் “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்பது இத்திரைப்படம் வெளிவரும்போதுதான் தெரிய வரும்.

“லியோ” திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதம் இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன. அதுவும் மலேசியா நாட்டில் நடத்த படக்குழு திட்டமிடுவதாக கூறப்பட்டது.
ஆனால் “லியோ” ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவை அக்டோபர் 5 ஆம் தேதி மலேசியாவில் ஒரு மிகப் பெரிய அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்ததாம்.

ஆனால் அதே அரங்கத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடக்க இருக்கிறதாம். அதற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாம். “சித் ஸ்ரீராம் நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்ய 4 நாட்கள் தேவைப்படும். ஆதலால் அக்டோபர் 5 ஆம் தேதி லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை வைத்தால் சித் ஸ்ரீராம் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை தயார் செய்ய முடியாது” என்று அரங்க நிர்வாகத்தினர் கூறிவிட்டார்களாம்.
ஆதலால் மலேசியாவில் உள்ள ஓப்பன் ஆடிட்டோரியத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி விடலாமா என்று திட்டம் போட்டுள்ளனராம். ஆனால் மழை பெய்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து வருகிறார்களாம். இவ்வாறு லியோ படக்குழுவினர் ஒரு பெரிய குழப்பத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.





