- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் கதாநாயகனாக கேபிஒய் பாலா அறிமுகமாகும் முதல் படம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட...

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கேபிஒய் பாலா அறிமுகமாகும் முதல் படம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்ற காமெடி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதனால் அவர் கேபிஒய் பாலா என்றுதான் அழைக்கப்படுகிறார். பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ள பாலா, தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்.

குறிப்பாக மலைவாழ் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிக்காக இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி இலவசமாக தந்துள்ளார். விவசாயிகளுக்கு தேவையான விவசாய உபகரணங்களை வாங்கி இலவசமாக தந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள், ஏழை பெண்ணுக்கு ஆட்டோ, முதியோர் கர்ப்பிணிப் பெண்கள் பயணிக்க இலவச பயண ஆட்டோ, மருத்துவ உதவிகள் என தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தன்னிடம் இருந்த ரூ. 5 லட்சம் பணத்தை தலா 1000 ரூபாய் வீதம் பலருக்கும் வழங்கிய கேபிஒய் பாலா, பிறகு பெட்ஷீட் லுங்கி நைட்டி பிஸ்கட் தண்ணீர் பாட்டில் எனவும் மக்களுக்கு நேரில் சென்று வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ந்து மக்களுக்கு உதவி வரும் நடிகர் பாலா, இயக்குனர் மற்றும் நடிகர் நடன இயக்குனர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்துள்ள சேவை என்ற அறக்கட்டளையுடன் இணைந்தும் இன்னும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த சூழலில் கேபிஒய் பாலா ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் என்ற தகவலை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இயக்குனர் ஷெரீப் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கேபிஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் வைபவ் நடித்த 25வது படம் ரணம் அறம் தவறேல் என்ற படத்தை இயக்கியவர் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த புதிய படம் உருவாகிறது.

இந்த படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறுகையில், வணக்கம் மக்களே, ராகவேந்திரா நிறுவனம் சார்பில் நான் தயாரிக்கும் ஒரு படத்தில் தம்பி கேபிஒய் பாலாவை அறிமுகம் செய்ய இருந்தேன். ஆனால் நல்ல கதையுடன் ஒரு வாரத்தில் நல்ல தயாரிப்பாளர் அவருக்கு கிடைத்து விட்டார். தனது வாழ்நாள் கனவை நனவாக்கப் போகிறார் தம்பி கேபி ஒய் பாலா என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்