கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. 10 படங்கள் வந்தால் அதில் 8 படங்கள் வன்முறை படங்களாக தான் இருக்கின்றன. படம் முழுவதும் வெட்டு குத்து கத்தி ரத்தம் துப்பாக்கி வெடிகுண்டு என ரணகளமாக தான் திரையில் காட்சிகள் வருகின்றன. படம் முழுக்க அதிரடியான சண்டை காட்சிகளே இருக்கின்றன.
அதிலும் ஹீரோயிசத்தை மட்டுமே களத்துக்கு வந்துள்ள நெல்சன் கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் போன்றவர்கள் படம் முழுக்க வன்முறை காட்சிகளை சிதற விடுகின்றனர். ரத்தமின்றி சத்தமின்றி ஒரு படம் கூட அவர்களால் தர முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இதற்கிடையே ஃபீல்குட் எனப்படும் மனதை தொடும் நல்ல படங்களும் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றன. அந்த வரிசையில் காக்கா முட்டை குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி லப்பர் பந்து மாமன் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இப்போது அதே ஜானரில் ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த 1990களில் தொட்டாச்சிணுங்கி சொர்ணமுகி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் கேஎஸ் அதியமான். அவர் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார். அந்த படம்தான் நினைவுகள்.
நடிகர் விதார்த் ரேவதி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை கேஎஸ் அதியமான் டைரக்ட் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். நிச்சயமாக இந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி படம் போன்றே உணர்வுகளை மையபடுத்திய ஒரு கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்கிய தொட்டாச்சிணுங்கி படம் மன உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்திய ஒரு படமாகும். அதே போல் சொர்ணமுகி என்ற படத்தில் தேவயானி கதையின் நாயகியாக நடித்திருந்தார். அந்த படமும் மிகச்சிறந்த ஒரு படமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குனர் பல ஆண்டுகளுக்கு பிறகு தரும் நினைவுகள் படம் பெரிய வரவேற்பை பெறும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.





