- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தின் நடிக்கப் போகிறேன் என்று நான் சொன்னதும் அப்பாவின் ரியாக்சன் இதுதான்... ரகசியத்தை பகிர்ந்த...

படத்தின் நடிக்கப் போகிறேன் என்று நான் சொன்னதும் அப்பாவின் ரியாக்சன் இதுதான்… ரகசியத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி மகன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன்மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு பெரிய படங்களுக்கு வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம், நகைச்சுவை என அத்தனை களங்களிலுமே கலந்து கட்டி அடிப்பவர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பை விரும்பாத ஆட்களே இல்லை என்று கூட கூறலாம்.

திரை உலகிற்கு வந்து பல்வேறு தோல்வி படங்களை அவர் கொடுத்தாலும், அதிலிருந்து மீண்டு வரும் விதமாக வெற்றி படங்களை கொடுப்பதால் இன்று வரை அவர் திரையுலகில் நிலைத்து நிற்கிறார். நானும் ரவுடிதான், தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தீனி போட்டது மட்டுமல்லாமல், அவரை ரசிகர்களுக்கு பிடிக்கவும் காரணமாய் அமைந்தன.

- Advertisement -

இது போக வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டும் விஜய் சேதுபதி, விஜயுடன் மாஸ்டர் மற்றும் கமலுடன் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் மிரட்டி இருந்தார். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை கச்சிதமாக முடித்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதால் அவருக்கென ஒரு மார்க்கெட் இங்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்தை எட்டி இருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர்தான் இந்தப் படத்தை எடுத்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி சலூன் கடைக்காரராக நடிக்கிறாராம். இந்தப் படத்திற்குப் பிறகு மிஷ்கினுடன் அவர் இணைந்து பணியாற்றுகிறார். அதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அவர் ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். அதுபோக விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்திலும் அவரது மகன் சூர்யா வருவார். இந்த நிலையில் தற்போது சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு, பீனிக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேசி இருப்பதாவது,

அப்பாவின் பெயரில் வரக்கூடாது என்று நான் முடிவு செய்தேன். ஒருமுறை அப்பாவின் சூட்டியின் போது நான் அவருக்கு சாப்பாடு கொடுக்க சென்றேன். எனக்கு சண்டைக் காட்சிகள் பிடிக்கும் என்பதால் அதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து அனல் அரசு மாஸ்டருக்கு நான் வணக்கம் வைத்தேன். அவர் முகத்தில் நான் பட்ட போது நான் என்ன செய்ய முடியும். படத்தில் நடிக்கப் போவது குறித்து அப்பாவிடம் சொல்லும் போது சந்தோஷப்பட்டார். அம்மாவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அவர் வேறு நான் வேறு. அதனால்தான் பேனரில் கூட சூர்யா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை என்று பேசினார்.

- Advertisement -

சற்று முன்