- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் வீட்டில் 2 பெரிய வேல்கள் இருக்கின்றன… அது ரஜினி கமல் இருவரையும்தான் குறிக்கும் -...

என் வீட்டில் 2 பெரிய வேல்கள் இருக்கின்றன… அது ரஜினி கமல் இருவரையும்தான் குறிக்கும் – இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவர் கே எஸ் ரவிக்குமார். கடந்த 1990ம் ஆண்டில் வெளியான புத்தம் புது பயணம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அவரே அதில் வில்லனாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து புரியாத புதிர் சேரன் பாண்டியன் படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.

தொடர்ந்து சூரியன் சந்திரன் பொண்டாட்டி ராஜ்ஜியம் ஊர்மரியாதை பேண்டு மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமாருக்கு மிகப்பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படம் நாட்டாமை. 1994ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல கோடி ரூபாய் லாபத்தை அள்ளியது.

- Advertisement -

இரட்டை வேடங்களில் சரத்குமார் நடித்திருந்தார். குஷ்பு மீனா விஜயகுமார் மனோரமா கவுண்டமணி செந்தில் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக 31 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. கவுண்டமணிக்கு அப்பாவாக செந்தில் நடித்திருந்தார்.

கேஎஸ் ரவிக்குமார் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படையப்பா லிங்கா ஆகிய படங்களை இயக்கினார். இதில் லிங்கா சரியாக போகவில்லை. மற்ற இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். அதே போல் நடிகர் கமல்ஹாசன் நடித்த தெனாலி தசாவதாரம் ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார், இந்த 2 படங்களும் மாஸ் ஹிட் படங்களாக தான் இருந்தன.

- Advertisement -

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் கேஎஸ் ரவிக்குமார், சமீபகாலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்டு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். எனினும் ரஜினி கமல் என ஜாம்பவான் நடிகர்களின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக கேஎஸ் ரவிக்குமார் இன்றும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தை டைரக்ட் செய்த போது எனக்கு கிடைத்த சம்பளம் ரூ. 65 லட்சத்தில் தி நகரில் ஒரு பெரிய இடத்தை வாங்கினேன். அதன் பிறகு கமல் நடித்த தெனாலி படத்தை நான் தயாரித்த போது கிடைத்த லாபம் ரூ. 3 கோடியில் அங்கு பெரிய வீட்டை கட்டினேன். அதனால் படையப்பா, தெனாலி படங்களில் வேல் ஒரு பிரதானமாக கேரக்டர். அதை குறிக்கும் விதமாக வீட்டில் 2 பெரிய வேல்களை செய்து வைத்திருக்கிறேன், என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்