- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் தான் நேர்மை புரட்சி எல்லாம், நிஜத்தில் அவரவர் பாக்கெட் நிரம்பினால் சந்தோஷமே - இந்தியன்...

சினிமாவில் தான் நேர்மை புரட்சி எல்லாம், நிஜத்தில் அவரவர் பாக்கெட் நிரம்பினால் சந்தோஷமே – இந்தியன் படக்குழுவினருக்கு நேர்ந்த ஏமாற்றம்

- Advertisement -

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படம், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படமாக அமைந்தது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்லும் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார். கடைசியில், லஞ்சம் வாங்கிய தன் மகன் கமலையும் அவர் கொன்றுவிடுவதுதான் படத்தில் ஹைலைட்.

இதில் சுகன்யாவும், வயதான தோற்றத்தில் மிகவும் அசத்தலாக நடித்திருந்தார். கஸ்தூரி, நிழல்கள் ரவி, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தியன் படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஷங்கர் படங்களில் இதுவும் பேசப்பட்ட படமாக அமைந்தது.

- Advertisement -

இப்போது, இந்தியன் 2 படத்தை, ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் 2ம் பாகத்தை இயக்கும்போதே, 3ம் பாகத்துக்கான விஷயங்களும் கிடைத்துவிட, அதையும் படமாக்கி விட்டார். இப்போது 2ம் பாகத்துக்காக ரீஷூட் எடுத்தால் இந்தியன் 2, மற்றும் 3 என இரண்டு படங்களுமே தயாராகி விடும். அதாவது, ஐந்தே முக்கால் மணி நேரம் படம் எடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் 30 நிமிட காட்சிகளை மட்டும் படமாக்கினால் போதும்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் இந்தியன் 2 படத்துக்காக கமலுக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 30 கோடி. இப்போது இந்தியன் 3 படம் எடுக்கப்பட்ட நிலையில், மீதி காட்சிகளை எடுக்க கமல் பெற்ற சம்பளம் ரூ. 120 கோடி. அதாவது, ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி வாங்குவதால், அதில் விட்டதை இதில் பிடித்துவிட்டார் கமல்.

- Advertisement -

அதே போல், இந்தியன் படத்துக்காக இயக்குநர் ஷங்கருக்கு முதலில் பேசப்பட்ட சம்பளம் 29 கோடி ரூபாய். இப்போது, இந்தியன் 3 பாகமும் தயார் என்பதால், மேலும் கூடுதலாக ரூ. 29 கோடி ரூபாய் என அவருக்கு சம்பளம் தர ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. அதன்படி ஹீரோ, டைரக்டர் என இருவருமே இந்தியன் 2, 3 படங்களுக்காக இரட்டை சம்பளம் பெற்றுவிட்டனர்.

ஆனால், இந்த படத்தில் பணிபுரியும் மற்ற டெக்னிஷியன்கள், தொழிலாளர்கள் மற்ற துறை சார்ந்த ஊழியர்கள் என அனைவருக்கும் முன்பு பேசப்பட்ட அதே சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. கூடுதலாக சம்பளம் இல்லை. அதாவது, இரண்டு படங்களுக்கும் உழைத்தும், ஒரு படத்துக்கான சம்பளம் மட்டுமே அவர்களுக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஹீரோ, டைரக்டர் மட்டும் தங்கள் வருமானத்தை சம்பாதித்துக்கொண்டு எங்களை கண்டுக்காமல் விட்டுட்டார்களே என ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்