- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தை தயாரிக்க முன்வந்த டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், விஜயுடன் கைகோர்க்க களம் இறங்கிய நடிகர்...

விஜய் படத்தை தயாரிக்க முன்வந்த டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், விஜயுடன் கைகோர்க்க களம் இறங்கிய நடிகர் சரத்குமார் – இதென்னப்பா டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்குதே?

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், கடந்த 1990களில் புத்தம்புது பயணம் என்ற படத்தை டைரக்ட் செய்து, தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். பார்க்கறதுக்கு பக்கா வில்லனா இருப்பேன். ஆனா நான்தான்டா ராசா படத்துக்கு கதாநாயகன் என முதல் படத்திலேயே பஞ்ச் டயலாக் பேசி வில்லனாக நடித்து அசத்தியவர். எனினும் கேஎஸ் ரவிக்குமாரை கவனிக்க வைத்த படம் சேரன் பாண்டியன்தான்.

படையப்பா, தெனாலி, முத்து, நாட்டாமை, நட்புக்காக, தசாவதாரம், அவ்வை சண்முகி என பல ஹிட் படங்களை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார் ஒரு கட்டத்தில் இயக்குவதை தவிர்த்து விட்டு படங்களில் குணச்சித்திர வேடங்களி்ல் நடிக்க ஆரம்பித்தார். தங்கமகன், கோமாளி, அயோக்யா, கூகுள் குட்டப்பா, ரெமோ போன்ற படங்களில் அவரை நடிப்பை வெகுவாக ரசிகர்கள் ரசித்து வரவேற்றனர்.

- Advertisement -

டைரக்‌ஷன், நடிப்பு மட்டுமின்றி தெனாலி, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்தும் இருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இதில் தெனாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கூகுள் குட்டப்பா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்ற இலங்கையை சேர்ந்த தர்ஷன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் மிக நெருங்கிய நண்பர் டைரக்டர் விக்ரமன். இவரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக கேஎஸ் ரவிக்குமார் பணிசெய்திருக்கிறார். புது வசந்தம், பூவே உனக்காக, சூரியவம்சம், வானத்தை போல, உன்னை நினைத்து போன்ற மெகா ஹிட் படங்களை தந்து அசத்தியவர். சமீப காலமாக அவரது மனைவிக்கு உடல் நலமில்லாததால் அவர் படங்கள் இயக்குவது இல்லை.

- Advertisement -

இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக வைத்து, கேஎஸ் ரவிக்குமார் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். டைரக்டர் சூரியக்கதிர் இயக்கும் இந்த படத்துக்கு ஹிட் லிஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகன் விஜய் கனிஷ்காவுடன் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூரியவம்சம் படத்தில் நடித்த வகையிலும் விக்ரமனும்., சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக படங்களில் நடித்த வகையில் கேஎஸ் ரவிக்குமாரும் சரத்குமாருக்கு மிகவும் வேண்டப்பட்ட, முக்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகை சித்தாரா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டரை, நடிகர் தனுஷ் வெளியிட்டார். கேஎஸ் ரவிக்குமார், விக்ரமன் இருவருமே தமிழ் சினிமாவில் ஹிட் டைரக்டர்கள். இதில் விக்ரமன் மகன் நடிக்கும் படத்தை, கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்